கும்புக்கந்துறையின் கல்வி வளர்ச்சியும் அரசியலும்- 35
அல்-குர்ஆன் போதனையிலிருந்து ஆரம்பமாகும் கும்புக்கந்துறைக் கல்வி வரலாறு இருநூறு வருடங்களையும் கடந்ததாகும்.
குடியிருப்பின் நீண்ட பயணத்தில் 6. 11. 1939ம் ஆண்டு துவங்கப்பட்ட கும்புக்கந்துறைப் பாடசாலை இன்று “அல்ஹிக்மா” என்ற பெயரில் மகாவித்தியாலயமாக வளர்ச்சியடைந் திருக்கின்றது. பாடசாலையின் முதலாவது அதிபராகப் பதவியேற்றவர் மாவனல்லை - ஹிங்குலோயாவைச் சேர்ந்த அதிபர் ஜனாப் D.L.M. ஹனீபா அவர்களாவர். பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை இருபதுக்கும் அதிகமான அதிபர்கள் பணிபுரிந்திருப்பதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. 1962ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1966ம் ஆண்டு மூடப்பட்ட பெண்கள் பிரிவிலும் மூன்று அதிபர்கள் பணிபுரிந்திருக்கின்றனர்.
அரசியல்
கும்புக்கந்துறையின் அரசியல் வரலாறு கிராம சபையிலிருந்து ஆரம்பமாகின்றது. அக்காலை பலிஸ்பத்துவக் கோரள (மேற்கு) கிராம சபையில் அங்கத்தவர்களாக விளங்கிய கனவான்கள்:
ஜனாப் ஜெய்னுல் ஆப்தீன் அப்துல் ரஹீம்,
ஜனாப அபூதாலிப் முஹம்மது ரவூப்,
அல்ஹாஜ் ஜெய்னுதீன் புகார்தீன்
அல்ஹாஜ். யூ. ஏ. வஹாப்தீன்
1988ம் ஆண்டு கிராமசபை அமைப்புக்குப் பிரதியீடாக அறிமுகஞ்செய்யப்பட்ட குண்டசாலைப் பிரதேச சபையிலும், பிரதேச சபை அங்கத்தவர்களாக பின்வரும் கனவான்கள் அங்கத்துவம் வகித்துள்ளனர்.
ஜனாப் அப்துல் காதர் நிஸாம்
அல்ஹாஜ். எல். ஏ. அபூ ஹனீபா
ஜனாப் அலாவுத்தீன் முஹம்மது ஷிப்லி
ஜனாப் ஸெய்யித் முஹம்மது இஸ்மாயில்
(தொடரும்)
0 Comments