உணரமாட்டோமா!!

உணரமாட்டோமா!!


அனைத்தையும் படைத்து
அதன் வாழ்வுக்கு வழிகாட்டி
கொடுக்கப்படும் நலவுகள்
வழங்கப்படும் பொக்கிசங்கள்
இன்னும் பல நோய்கள்
ஆயிரமாயிரம் சோதனைகள்
இதற்கெல்லாம் 
ஆற்றல் உள்ளவன் யார்!

உணரமாட்டோமா!
உருவமில்லாமல் வாழ்ந்த
ஆதம், ஹவ்வா இவர்களை
உலகிற்கு அனுப்பியது யார்!

உணரமாட்டோமா!
நூஹ் நபியை கப்பல்
கட்ட வைத்து
நீரின்றி எவ்வாறு ஓட்ட
முடியுமென கேலி செய்தோர்
வாய்களை மூட வைத்து
பெருவெள்ளத்தில் கப்பலை
செலுத்தியவன் யார்!

உணரமாட்டோமா!
பிர்வ்னுடைய படை பின்னே
செங்கடல் முன்னே
மூஸா நபியின் மக்களின்
ஆதங்கத்தின் உச்சத்தில்
அவர்களைக் காப்பாற்றியது யார்!

உணரமாட்டோமா!
யூசூப் நபியின் சகோதரர்களின்
பொறாமைத் தீயின் விளைவால்
பாழுங்கிணற்றில் தள்ளி
அடிமையாக விற்கப்பட்டு
ஏழு ஆண்டுகள் 
சிறையில்வாடி ..
அந்நாட்டுக்கு வல்லமை பொருந்திய
அமைச்சராக வாழ வைத்தது யார்!

உணரமாட்டோமா!
தீச்சுவாலை நிறைந்த பெருங்
குழியில்
நாடே திரண்டு நிற்க
தடுத்திட யாருமின்றி
தீக்குள் தள்ளப்பட்ட
இப்றாகீம் நபியை
காப்பாற்றியது யார்!
(ஹஸ்புனல்லாஹூ 
வநிஃமல் வக்கீல்)

உணரமாட்டோமா!
மீனின் வயிற்றில்
அகப்பட்டு
நாற்பது நாட்கள்
துன்பப்பட்டு
வேதனையோடு வாழ்ந்த
நபி யூனுசை
வாழ வைத்தது யார்!
(லாயிலாஹ இல்லா 
அன்த ஸுபுஹானக்க
இன்னி குன்தும் 
மினல் ஆலமீன்)

கொடுக்கப்பட்ட அத்தனை
செல்வமும் அழிக்கப்பட்டு
அசைக்க முடியாத நோயில்
ஆட்பட்டு
வேதனையில் துடி துடித்த
நபி அய்யூப்பை சுகப்படுத்தி
மீண்டும் அனைத்து செல்வமும்
கொடுத்து மகிழ்வித்தது யார்!
(அன்னி மஸ்ஸன்னியலு 
வஅன்த அர்ஹமர்ராஹீமீன்)

அண்ட சராசரமும்
அவனின் கரத்தில் இருக்கையிலே
அவன் நினைவினை மறந்து வாழும்
நம்மை மன்னிப்பவன் வல்லமையுள்ள
அல்லாஹ்வே அன்றி யாருமில்லை..

பாவமன்னிப்பு கேட்டு நாமும்
அவன் அருளை நாடி நிற்கையிலே
நீர்வீழ்ச்சியின் வேகத்தை விட
ஓடோடி வந்து குறை தீர்ப்போன் 
அவன் தானே!

அவன் புகழ் பாட வந்தேன்
அவன் அருள் தேடி நின்றேன்
எம் துயர் தீர்ப்பவன்
அல்லாஹ்வையன்றி 
வேறு யாருமில்லை!




Post a Comment

Previous Post Next Post