Ticker

6/recent/ticker-posts

Ad Code



கண்கள் மூடும் முன்னே..!


மண்ணில் பிறந்த மனிதன்
மண்ணிலே மடிந்து 
மண்ணுக்கே இறையாக வேண்டும்.

மனிதா நீ,
விரும்பினாலும்
விரும்பா விட்டாலும்
இந்த நியதியை 
அனுபவித்தே தீர வேண்டும்.

இன்று நீ
இறந்து போனால் -
நாளை, 
இந்நேரம் நல்லடக்கம் 
யாவும் நல்லபடி முடிந்திருக்கும்
புதைப்பது உன்னை மட்டுமல்ல,
 உன் வரலாற்றையும் 
கூடவே தான்.

எப்படி என்கிறாயா?

இன்றுஉனக்காக
உள்ளம் உருகி
ஒப்பாரி வைத்தவர்களும்
ஒய்ந்து போக
ஓரிரு நாட்களே போதும்.
நாளை மறுநாள் 
காரியம் யாவும்
வழமைப்போல 
செவ்வனே நடந்தேறும்.
நாலு நாட்கள்
கடந்து போனால்
நாய் செத்த கதைதான்.

நாளாந்தம் இது
நடக்கின்ற உண்மை.
ஆனால்,
தனக்கும் வரும்வரை
மதிமயங்கியே நாம்
வாழ்வதும் உண்மை.
நல்லது கெட்டது
நபிவழி மறை நெறி
மனநீதி என்றெல்லாம்
பாராமல் நீ,
வாரிசுகளின்
நல்வாழ்வுக்காய்
நாயாய் உழைத்திருப்பாய்.

ஊன் உணவின்றி
உறக்கமின்றி
உயிரையே 
உறமாக்கி
உருகிப்போன பின்
உயிரை விட்டு விடுவாய்.
அதுவரை உனக்கு
உன்
உயிரின் பெறுமதிகூட 
புரியாமல் போயிருக்கும்.
மனிதனே!புரிந்துகொள்

உனக்குப்பின்  உன் 
சொத்தின் பங்கீடுதான்
உண்மையானது
உன் பெயரில் தர்மமென 
வருமென்பது உண்மைக்கு 
அரிதானது.

வான்மரை மதித்து
தர்மமென்று நீ
அல்லிக் கொடுப்பதெல்லாம்
தவறாது உனக்கென்றே
வந்து சேரும்
ஆசையாசையாய்
பாதுக்காத்து 
வைப்பதெல்லாம் 
பரம்பரைக்கே விருந்தாகும்
பரிதாபாம் ஒன்றே
பரிசாக உன்னைச் சேரும்.

தேடிய செல்வமெல்லாம்
மாட மாளிகையோ
அட்ப கையூசியோ
மஹ்ஷரில் உனக்கு
காத்து நிட்பதும் 
கட்பனைக்கும் எட்டாத
கணக்கு வழக்குகள்
கண் விழித்திடு மனிதா 
நீ,
கண்கள் மூடும் முன்னே.


வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டைEmail மூலம் அனுப்புங்கள்
      Email-vettai007@yahoo.com            

Post a Comment

0 Comments