Ticker

6/recent/ticker-posts

Ad Code



மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்!


விழிகளுக்கு விருந்தாய் 
அரும்பே மலர்ந்தாய்
விண்மதி ஒளியென 
கண்ணில் படர்ந்தாய்
விடியலின் கதிராக 
பிரகாசம் தந்தாய்
விதையென விழுந்து 
காதலை விதைத்தாய்
முகம் பார்த்து 
மொழிகள் மறந்தேனே
தலை குனிந்த 
அழகில் தடுமாறினேனே
மயங்கினேன் காதல் 
சொல்லத் தயங்கினேன்
கிறங்கினேன் உயிரோடு 
இணையவே விரும்பினேன்
திரும்பினேன் உன்பால் 
தளும்பியே தவிக்கிறேன்
தொலைகிறேன் உன்னில் 
வார்த்தைகளின்றி ஊமையாகிறேன்
நீ இல்லாமல் நினைவுகளோ 
பாரமானதே
மாயங்கள் செய்தே 
என்னைக் கொய்தாய்




Post a Comment

0 Comments