மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-37 (வரலாறு-பாகம்-2)

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-37 (வரலாறு-பாகம்-2)


கும்புக்கந்துறை மஸ்ஜித் - 37
பலகொள்ள குடியேற்றத்ததிட்டத்தில் மஸ்ஜித் அமைக்கப்படுவதற்காக ஆரம்பத்தில் வழங்கப்பட்ட நிலம் கற்பாறைகள் நிறைந்த இடமாக விளங்கியதால், குடியேற்றவாசிகளின்  கோரிக்கைக்கமைய மகாவலிக் கரையின் மாற்றுநிலம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து  ஆரம்பத்தில் வழங்கப்பட்ட நிலப்பரப்பில்  தற்போது செஞ்சிலுவைச் சங்கக் காரியாலயம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.  

இரண்டாவதாக வழங்கப்பட்ட ஆற்றங்கரைக் காணியும் அடிக்கடி நீரில் மூழ்கி வந்ததன் விளைவால் மாற்றீடாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புதிய நிலப்பரப்பில்  “மஸ்ஜிதுல் முகர்ரம்” என்ற பெயரில் பலகொள்ள மஸ்ஜித் எழுந்திருக்கின்றது. 

உயர்ந்த மேட்டு நிலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்  மஸ்ஜிதுக்குச் செல்லும் பாதை ஆழளஙரந சுழயன எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன் அதன் நுழைவாயலில் அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வரவேற்பு வாசகமும் பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பானதாகும். மஸ்ஜிதோடு இணைந்ததாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குர்ஆன் மத்ரஸாவுடன் 2008ம் ஆண்டு ஓகஸ்ட் 10ம் திகதி முதல் “அல்-ஜாமிஅதுல் முகர்ரமா” என்ற பெயரில் ஓர் ஹிப்லுள் குர்ஆன் மத்ரஸாவும் இயங்கி வருகின்றது. சிறப்புக்கள் நிறைந்த அல்-மஸ்ஜிதுல் முகர்ரம் மஸ்ஜிதின் நிர்வாக சபைத் தலைவராக கனவான் அல்ஹாஜ் நலவங்ஸ பணிபுரிந்து வருகின்றார்.

பலகொள்ள  குடியேற்றத் திட்டம் ஆரம்பமாகியதோடு,   அதன் பாடசாலை வரலாறும் ஆரம்பமாகின்றது.  

1961ம் ஆண்டு  நவம்பர் முதலாம் திகதி  தெல்தெனிய நகரில் தெல்தெனிய முஸ்லிம் வித்தியாலயம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையின் தொடர்ச்சியே பலகொள்ளப் பாடசாலையின் ஆரம்ப வரலாறாகும்.  தெல்தெனிய முஸ்லிம் வித்தியாலயம் நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து அங்கிருந்த மாணவர்கள் கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்துடன் இணைக்கப்பட்டதை அங்கீகரிக்காத முஸ்லிம் பெற்றோர் பலகொள்ளையில் முஸ்லிம் பாடசாலையை ஆரம்பித்து,  முன்னைய பாடசாலையை நினைவுகூர்வதாக புதிய பாடசாலைக்குத்  தெல்தெனிய முஸ்லிம் வித்தியாலயம்  எனப் பெயரிட்டனர்.

 தெல்தெனிய நகரில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தலைமையாரியராகப் பதிவியேற்ற பெருமை மடவளை மெடிகேயைச் சேர்ந்த ஜனாப் ஏ. எம். எம். முஹ்ஸீனைச்சாரும். இன்று 161 மாணவர்களுடன் பயணஞ்செய்யும் பலகொள்ளைப் பாடசாலையின் மாணவர்களில் அதிகமானோர் அளுத்வத்தையைச் சேர்ந்தவர்களாவர். மாணவர் தொகையில் எழுபத்தைந்து ஆண்களும் எண்பத்தாறு பெண்களும் அடங்குவர். ஆசிரியர் குழுவில் பதினான்கு பேர் பணிபுரிகின்றனர். அதன் அதிபராகப் பணிபுரிபவர் மடவளை மெடிகேயைச் சேர்ந்த அஷ்ஷெய்க் முஹம்மத் றஷாத் (நளீமி) அவர்களாவார். 0.47 ஹெக்டையார் பரப்பைக் கொண்டிருக்கும் பாடசாலையின் வளர்ச்சியில் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் காட்டும் அக்கறை மெச்சுதற்குரியது. சமீபத்தில்  மஸ்ஜிதுல் முகர்ரம் நிர்வாக சபையின் தலைவர் அல்ஹாஜ் நலவங்ஸ அவர்களால் பாடசாலைக்கு ஓர் புதிய கட்டிடமும் அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டுதற்குரியது. 
(தொடரும்)


வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com  

Post a Comment

Previous Post Next Post