5-வது 20 ஓவர் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி

5-வது 20 ஓவர் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி

வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது 20 ஓவர் போட்டி பார்படாசில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் பொல்லார்டு 25 பந்தில் 41 ரன்னும், பாவெல் 17 பந்தில் 35 ரன்னும்,பிராண்டன் கிங் 34 ரன்னும் எடுத்தனர். 

இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 

இங்கிலாந்து அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்னில் வெற்றி பெற்றது. ஜேம்ஸ் வின்ஸ் அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் சாம் பில்லிங்ஸ் போராடினார். அவர் 28 பந்தில் 41 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், ஹொசைன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஜேசன் ஹோல்டர் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3 - 2 என கைப்பற்றி அசத்தியது. 



வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com  

Post a Comment

Previous Post Next Post