கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடா எல்லையை கடக்கும் லொறி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அவரின் இந்த அறிவுப்புக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றது.

நூற்றுக்கணக்கானவர்கள் தலைநகரில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் ரகசிய இடத்தில் தலைமறைவாகி இருக்கிறார்.

இதுகுறித்து ஜெனரல் வெய்ன் டுவிட்டரில்,  போராட்டக்காரர்கள் தேசிய போர் நினைவிடத்தின் மீது நடனமாடி இழிவுபடுத்துவதையும் கண்டு நான் வேதனையடைந்தேன். கனடாவில் முந்தைய தலைமுறைகள் சுதந்திரமான பேச்சு உட்பட நமது உரிமைகளுக்காகப் போராடி மடிந்தன, ஆனால் இவ்வாறு இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com