Ticker

6/recent/ticker-posts

Ad Code

"தடுப்பூசி போடாதவர்களை இழிவு படுத்தப் போகிறேன்"-. பிரான்ஸ் அதிபரின் சர்ச்சை பேச்சு

தடுப்பூசி போடாதவர்களை அல்லது போட மறுப்பவர்களை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தரக்குறைவான முறையில் அவமதித்துப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது

தடுப்பூசி போடாதவர்களை அல்லது போட மறுப்பவர்களை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தரக்குறைவான முறையில் அவமதித்துப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரான்சில் தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே அங்கு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் தடுப்பூசி போடாதவர்களை மிகவும் தரக்குறைவாகப் பேசியது ‘ஒரு நாட்டின் அதிபரே இப்படிப் பேசலாமா?’ என்று அங்கு மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறையில் அடைக்கப்போவதில்லை. அவர்களைக் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தப் போவதும் இல்லை. வரும் ஜனவரி 15-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உணவகங்கள் செல்ல முடியாது, திரையரங்குக்குள் நுழைய முடியாது.

தடுப்பூசி போடாதவர்களை இழிவு படுத்தப் போகிறேன். நான் அவர்களை தொந்தரவு செய்ய விரும்புகிறேன். கோப்படுத்த விரும்புகிறேன். இதுதான் இனி அரசின் கொள்கை. நாங்கள் அதை இறுதி வரை செய்வோம்” என்று கூறினார்.

அவர் இவ்வாறு பேசியது அங்கு கடும் சர்ச்சைகளையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதிபர் பயன்படுத்திய பிரெஞ்ச் வினைச்சொல்லான “emmerder” என்பது மிக மோசமான வசைச்சொல் என்று கூறப்படுகிறது

எதிர்க்கட்சிகள் அதிபர் மேக்ரானை கடுமையாக எச்சரித்துள்ளனர், ஒரு அதிபர் தனக்கு வாக்களித்த மக்களைப் பார்த்து இப்படியா பேசுவது என்று கண்டித்துள்ளனர்.

Post a Comment

0 Comments