Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஏமாற்றங்கள்!


இன்றோடு இன்னொரு வருடம் 
காணாமல் போகிறது
திரும்பிப் பார்க்கத் 
தோன்றும் தருணங்களுடன்
சுழலுள் அகப்பட்டுப் 
போன தடங்களுடன் 

ஏதேதோ எதிர்ப்பார்ப்புகளுடன் 
வாழ்வில் இன்னொரு 
வருடம் கழிந்துவிட்டதை 
கலண்டர் உணர்த்திப் போகிறது..
அதிலிருந்த ஏமாற்றப்பட்ட 
நாட்களை ஏந்தி நின்ற 
சுவர் மீட்டுச் சொன்னது... 

வழமையான வறட்சியுடன்தான்  
கடந்து போன 
வருடமும் வந்திருந்தது..
இன்பங்களை 
சுமந்து வருமென்று 
யாரும் ஆரூடம்  சொல்லவில்லை
ஆனால் வந்தது....
எதிர்பாராத புறத்திலிருந்து.. 

கொஞ்சம் கெஞ்சல்கள்
ஏராளமாய் கொஞ்சல்கள்
எக்கச்சக்க காதல்கள்
சில போது ஊடல்கள்
அதை தொடர்ந்த உதறல்கள்
திரும்பவும் அதே புறக்கணிப்புகள்
வாழ்க்கையென்பது வட்டப்பாதைதான்
வலிகளுள் சிறைப்பட்ட அழகுதான் 

வாழ்வில் வந்தது 
புயலா?புஸ்வாணமா?
விதி வலியது
முதுகிலிருந்த மூதேவி 
மூர்க்கமாய் விளையாடினாள்.
திளைத்திருந்த இன்பமதில் 
களைத்துப் போக முதலே
அத்தனையும் தொலைந்து போனது..
கனவாய் கலைந்தும் போனது...
கானல் நீராகியும் போனது சுகங்கள்... 

மீண்டும் கன்னத்து மேடுகள் 
உலர்ந்து விட்டது
கண்ணீர் முழுதாய் வற்றிவிட்டது.. 
ஏமாறுவதற்கான எதிர்ப்பார்ப்புகளுடன் 
இன்னுமொரு வருடத்தில்....




Post a Comment

0 Comments