ஒற்றுமை வாழ்வின் முத்து!

ஒற்றுமை வாழ்வின் முத்து!


ஒன்றும் ஒன்றும் இரண்டு
படித்தால் வளர்ச்சி உண்டு!

இரண்டும் ஒன்றும் மூன்று
இறைவன் அருளை வேண்டு!

மூன்றும் ஒன்றும் நான்கு
முத்தமிழ் தானே வாழ்வு!

நான்கும் ஒன்றும் அய்ந்து
தீமை செய்ய அஞ்சு!

அய்ந்தும் ஒன்றும் ஆறு
அன்பே வாழ்க்கை கூறு!

ஆறும் ஒன்றும் ஏழு
ஆற்றல் ஏணியில் ஏறு!

ஏழும் ஒன்றும் எட்டு
நல்லவ ருடனே ஒட்டு!

எட்டும் ஒன்றும் ஒன்பது
நாட்டுப் பற்றே பண்பது!

ஒன்பதும் ஒன்றும் பத்து
ஒற்றுமை வாழ்வின் முத்து!



Post a Comment

Previous Post Next Post