Ticker

6/recent/ticker-posts

Ad Code



அன்பின் ஆழம்!


பிறந்த நாளுக்கு ஆசையோடு
புத்தாடை கேட்டாள்
அதிர்ந்து போனேன்
என்னில் நிகழ்ந்த அதிர்வு
அவளையும் 
அசைத்திருக்கக் கூடும்
ஒரு முறை 
முகமுகமாக நானும் அவளும்
சந்தித்துக் கொண்டோம்
ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதை
அன்று முழுவதும்
தவிர்த்துக் கொண்டே வந்தோம்
"மகளுக்கு பதில் சொல்ல முடியாத
வெறுமையின் இயலாமையில் நானும் "
" அப்பாவின் இயலாமையை 
சோதித்து விட்டோமே 
எனும் ஆழ்மன வலியில் மகளும்"
எனது இயலாமைக்கும்
அவளின் குற்ற உணர்வுக்குமிடையில்
அதிசயமாக வெளிப்பட்டது
அப்பா மகள் உறவுக்கிடையேயான 
அன்பின் ஆழம்
வாழ்வின் ருசி அறிய
ஏற்றம் மட்டுமல்ல
இறக்கமும் தேவைதானோ?...




Post a Comment

0 Comments