Ticker

6/recent/ticker-posts

Ad Code



சிறுநீரகத்தில் கல்


நான் கடந்த இரண்டு வாரங்களாக சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றேன். ஆனால் இன்னும் சரியான குணம் ஏதும் கிடைக்கவில்லை. யூனானி மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உண்டா ? தயவு செய்து தாமதமன்றி பதில் தரவும்.

வாய்ப்பு உண்டு என ஊகித்து அதைத் தடுப்பதற்குரிய வழிவகைகள் கையாள வேண்டும் அதிகமாக மிருகப் புரதங்கள், கனியுப்பு, விட்டமின் - போன்றவைகள் உட்கொள்பவர்களுக்கும் குறைவாக நீர் நார்ச்சத்துள்ள உணவு வகைகளை, சில மருந்துளை அதிகமாகப் பாவிப்பவர்களுக்கும் சில ஹோர்மோன்களின் அதிக தொழிற்பாட் டினாலும் இந்நோய் வரலாம். அத்துடன் சில ஆராய்ச்சிகளின் படி தொடர்ந்தும் சிறுநீரகக் கற்கள் ஏற்படுபவர்களுக்கு High blood pressure ஏற்படக் கூடிய வாய்ப்பு அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இந்நோய் வராமல் தடுப்பதே மேல். போதியளவு நீர், நார்த்தன்மையுள்ள உணவுகள், மரக்கறிவகைகள், பழவகைகள், தானியங்கள் போன்றவைகளைத் தினமும் உட்கொண்டு தேகப்பயிற்சியும் செய்தால் இன்ஷா அல்லாஹ் இந்நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். அத்துடன் உணவுகளுக்குச் சேர்க்கும் உப்பின் அளவையும் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு சராசரியாக 4 கிராம் உப்பு தினமும் போதுமானது. மேலும் திராட்சைப்பழம், மதுபானம், பியர் போன்றவைகளை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

இந் நோயின் அறிகுறிகளாக தாங்க முடியாத வலி, அதிக வியர்வை , உமட்டல், சிறுநீரகத்துடன் இரத்தம் வெளியேறல் உட்பட பல நோய்க் குறிகுணங்கள் காணப்படலாம். எனவே மேற்குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடி தகுந்த சிகிச்சை எடுப்பது முக்கியமாகும். அத்துடன் அதி கமாக நீர் பருக வேண்டும். உணவுக் கட்டுப்பாடு என்பது சிறுநீரகக் கல்லில் இருக்கும் கனியுப்பைப் பொறுத்தே உள்ளது.

நவீன மருத்துவத்துறையில் பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் சத்திர சிகிச்சை மூலமான சிகிச்சை முக்கியமா னதாகும். சிறுநீரகக் கற்கள் உடம்பில் ஏற்படுத்தும் தாக்கங்களை தவிர்ப்பதற்காக காலம் தாழ்த்தாது சிகிச்சை பெறுவதே முக்கியம். 

சிறுநீரகத் தொகுதியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கனியுப்பக்கள் ஒன்று சேர்வதால் கற்கள் உருவாகின்றன. இது ஒரு பாரிய நோயாக இல்லாவிட்டாலும் நோயாளிக்கு அதிக வேதனையைக் கொடுப்பதோடு தனது அன்றாட வேலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சிறுநீரகத் தொகுதியில் கற்கள் தேங்கி நிற்கும் இடத்தைப் பொறுத்து வேதனையின் தீவிரம் வித்தியாசப்படலாம்.

மனிதனின் சிறுநீரில் யூரிக் அசிட், பொஸ்பேட் மற்றும் கல்சியம் போன்ற
கனியுப்புக்கள் இருக்கலாம். இது சிறுநீரின் செறிவு தொடர்ந்தும் கூடிய நிலையில் இருக்கும் போது அல்லது மேற்குறிப்பிடப்பட்டுள்ள கனிப்புக்களைக் கொண்ட உணவு வகைகளை நாம் அதிகமாக உட்கொள்ளும் போது சிறுநீரில் கற்கள் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன. சில வேளை சிறுநீரகம் தனது தொழிலைச் சரிவரச் செய்ய முடியாத நிலையிலும் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன.

இந்நோய் அனேகமாகப் பெரியவர்களை அதிகம் தாக்குகின்றன. சிறுபிள்ளைகளில் இந்நோய் வருவது மிக மிக அரிதாகும். அதிக வெப்பநிலை உள்ள பிரதேசங்களில் வாழ்பவர்களையே அதிகமாகத் தாக்குகின்றன. அத்துடன் ஆண்களிடையே தான் இந்நோய் அதிகமாகக் காணப்படுகின்றன.

இவ்வாறு உருவாகும் கற்கள் படிப்படியாக பருமனில் அதிகரித்து சிறுநீர்க் குழாய்களை அடைக்கும் போதே தீவிர வலி ஏற்படுகின்றன. அத்துடன் ஒரு சிலருக்கு சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், வாந்தி, சிறுநீர்த் தொற்று நோய், சிறுநீரகத் தொகுதியில் சிறுநீர்த் தேங்கி சிறுநீரகத்திற்குப் பாதிப்பு ஏற்படக் கூடிய நிலைகள் ஏற்படலாம். 

சில வேளை சிறுநீரகத்தை அகற்றக் கூடிய நிலைக்கே கொண்டு போய்ச் சேர்க்கும் சிறுநீரகக் கற்கள் உருவாகுவதற்கு முன்பே ஒருவருக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகக் கூடிய வாய்ப்பை அறிந்து கொள்ளலாம். அதாவது சிறுநீரைப் பரி சோதித்துப் பார்க்கும் போது நான் மேற் குறிப்பிட்ட கனியுப்புக்கள் சிறுநீரில் காணப்பட்டால் எதிர்காலத்தில் சிறுநீர்கக்கற்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது யூனானி வைத்தியத்துறையில் சிறுநீரகக் கற்களுக்கான சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன. இம் முறை மூலம் சத்திரசிகிச்சையின்றி சிறுநீரகக் கல்லை மாத்திரைகள் மூலம் வெளியேற்றக் கூடியதாக இருக்கிறது. 

இதன் மூலம் பலர் பயன் பெற்றும் உள்ளனர்.

இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக சிறுநீரகக் கற்களினால் சிறுநீரகத்திற்கு ஏற்படக் கூடிய நிரந்தர தாக்கத்தைத் தவிர்ப்பதானால் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன்.





வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments