எழுத்தறிவித்தவன் இறைவனாகும் எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
தமிழ் கலாச்சாரம் என்பது கற்பிக்கும் ஆசானை இறைவனின் அந்தஸ்தில் வைத்து மதிக்கின்றது.
எண்ணையும் எழுத்தையும் இரு கண்களுக்கு ஒப்பிடுகின்றது.
தமிழ் சமூகம் என்பது இலங்கையில் கல்விக்கு முகவரி கொடுத்து, அறிவுக்கு மதிப்பளித்து, அடிமேல் அடிவிழுந்தும் அறிவினால் உயர்ந்து நின்று, உலகத்தை வென்ற சமூகம் என்ற உயர் பட்டத்தை வாங்கிய ஒரு சமூகம்.
இவ்வாறான ஒரு சமூகத்தில் எண்ணையும் எழுத்தையும் அறிவித்து தரும் ஒரு முஸ்லிம் ஆசிரியை, கல்வியின் ஆசானை, தனது கலாச்சார உடையை அணிந்துவந்தார் என்பதற்காக ஒரு தமிழ் சமூக அதிபரால் தாக்கி அவமதிக்கப்பட்டார்.
இச்சம்பவமானது இலங்கையின் பாடசாலை கல்வி வரலாற்றில், ஒரு கரை பதிக்கப்பட்ட கரும்புள்ளியாக கருத வேண்டி இருப்பதையிட்டும், முழு தமிழ் சமூகத்தையும் அவமானத்தால் மண்டியிட வைத்ததை இட்டும் தமிழ் சமூகம் சிந்திக்க வேண்டும்.
இவ் அதிபர். கல்விக்கும் அறிவிக்கும் மதிப்பளித்து கல்வியை தெய்வமாய் நினைத்து உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கும் ஒரு சமூகத்திற்கு இவரது செயல் பொருந்துமா.
அல்லது இவ்வாறான ஒரு அதிபர் இவ்வாறான ஒரு சமூகத்திற்கு பொறுத்தமுடையவரா என்பதை தமிழ் சமூகம் சிந்திக்க வேண்டும்.
சமூகத்தின் ஒரு தலைமுறைக்கு வழிகாட்டும் அதிபர் இவ்வாறு நடந்து கொள்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இவ் அதிபரின் இவ் ஈனச் செயல் எதிர்காலத்தை எதிர்கொள்ள இருக்கும் ஒரு சந்ததியின் கழுத்தைப் பிடித்து பாதாளத்தில் தள்ளுவதற்கு சமனாகும்.
தனது நிர்வாகத்திற்கு ஒரு ஆசிரியை தடையாக இருந்தால், அல்லது ஒழுக்க நடைமுறைகளில்,வேறுவிதமான நிர்வாக ரீதியிலான பிரச்சினை ஒன்றிற்கு ஒரு ஆசிரியை ஒரு அதிபர் நிராகரிப்பதில்நியாயங்களை காணலாம்.
அதிலும் அவ்வாறான பிரச்சினைகளின் போதும்
அது கல்வி காரியாலய ரீதியில், நிர்வாக ரீதியில் தீர்க்கப்பட வேண்டும்.
அவ்வாறில்லாமல் ஒரு ஆசிரியை ஆடைக் குறைப்பு இல்லாமல் முழு அளவிலான ஒழுக்கமான ஆடையை அணிந்து வந்தார் என்பதற்காக ஒரு பெண் அதிபரினால் அவமதிக்கப்பட்டது என்பது முழு பெண்ணினத்திற்குமே தலைகுனிவை ஏற்படுத்திய செயலாகும்.
இவ்வாறாக அருவருக்கத்தக்க முறையில், ஒரு சமூகத்தின் ஒரு தலைமுறையின் எதிர்கால பிஞ்சுகளின் நெஞ்சில் இனவாத சிந்தனையை வளர்த்து, பாதாளத்தில் தள்ளும் இவ் அதிபரின் தொடர்ச்சியான உத்தியோகம் சம்பந்தமாக தமிழ் சமூகம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.
இவ்வாறான இனவாதத நஞ்சூட்டும் அதிபரின் கீழ் நன் நடத்தைகளை கட்கும் மாணவியர் எதிர் காலத்தில் ஏனைய சமூகத்துடன் எவ்வாறு கை கோர்த்து இந்த நாட்டில் வாழும் என்பதை தமிழ் சமூகம் சிந்திக்க வேண்டும்.
ஒரு பெண் பாதையில் தடுக்கி விழுந்தால் கூட அதை பார்த்து நிற்கும் ஏனைய பெண்களின் நெஞ்சு பதறுகிறது. இதுவே பெண்மை. விரட்டப்பட்ட பெண் ஆசிரியையும், விரட்டிய அதிபரும் வயதில் தாய், மகள் வயதை ஒத்தவர்கள்.
இவ்வாறான ஒரு நிலையில் ஒரு தாய்மையின் பண்பு இவ்அதிபரிடம் இருந்து வெளிப்படாததது அதிசயமே. இதைவிடுத்து ஒரு பெண்ணை தூற்றி பல நூறு பேருக்கு மத்தியில் அவமதித்து அசிங்கப்படுத்தும், அதிலும் ஒரு அதிபரின் நிலையை என்னவென்று சொல்வது.
இன்று எந்த ஒரு முஸ்லிம் பாடசாலையிலும் பயிலும் மாணவியரின், அல்லது கற்பிக்கும் ஆசிரியையின் அவர்களின் தமிழ் கலாச்சார உடையுடன் பூவைத்து பொட்டு வைத்து தலை திறந்து வரும் எவரினதும் மானம் மரியாதைக்கள் பறிக்கப்பட வில்லை என்பதை சமூகம் ஏன் இவர்கள் சிந்திப்பதில்லை.
இன்றும்கூட வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரிக்கு முஸ்லிம் பிள்ளைகளின் ஹிஜாப் களட்டப்பட்ட பின்பே உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர்.
அதேவேளை முக்கிய கூட்டங்களுக்கும் கூட முஸ்லிம் பெற்றோர் அபாயா ஹிஜாப் உடையுடன் அனுமதிக்கப்படுவதில்லை.
அதேவேலை பக்கத்தில் உள்ள பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தமிழ் பிள்ளைகள் முந்தானை ஹிஜாப் காட்சட்டை இன்றி கல்வி கற்றதையும், அங்கு ஹிந்து மத்தைச் சேர்ந்த செல்வி செல்வநாயகம் போன்ற சிறந்த ஆசியைகள் உப அதிபர் பதவியில் இருந்து பாடசாலையை சிறிதும் வித்தியாசமின்றி வெற்றிகரமாக நடத்திச் சென்று இவரிடம் கற்ற மாணவியர் உயர் துறைகளில் இருக்கும் அண்மைக் காலத்தையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு படுத்துவது பொருத்தம் என நினைக்கிறேன்.
அவ்வாறாயின் ஏன் இந்த வெறி.?
மறுபுறம் 30 ஆண்டுகளின் பின்னர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள உறவுகள் பலப்படுத்த வேண்டும் என்றும், அரசியலுக்காக தமிழ் முஸ்லிம் உறவுகளில் பிரிவுகளை ஏற்படுத்த முனைவேர் அடையாளம் காணப்படல் வேண்டும், மனக் கசப்புகள் மறக்கப்பட வேண்டும்.
இனிவரும் காலங்களில் இனவாத அரசியல் சிந்தனைகளை தோற்கடிக்கப்பட்டு சமூகங்கள்ஒன்று சேர வேண்டும் என முழங்கி வரும் தமிழ் பேசும் அரசியல் தலைமைகள், இதற்காக முன்னின்று செயற்பட்டு வரும் நிலைமையில் இவ்வாறான ஒரு துரதிஷ்ட சம்பவம் ஏன்.?
எனவே இவ்வாறான புல்லூரிகள் வளர்வதையிட்டுமுளையிலேயே கிள்ளி எறிய தமிழ் தலைமைகள் கடும் பிரயத்தனம் மேற்கொள்ள
வேண்டும்.இன்று மேற்கத்திய நாடுகள் உட்பட, முழு உலகமும் அவரவர் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவற்றுக்கு இடமளிக்கப்பட வேண்டும். அவை மற்ற சமூகத்தினால் மதிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்படும் நிலையிலும்,
இவ்வாறான கீழ்த்தரமான இனவாத சிந்தனைகள் உலகில் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் இவ்வாறான சிந்தனைகள் உடையவர்களை உலகம் வெறுத்து ஒதுக்கும் நிலையிலும் இவரின் செயல் பற்றி தமிழ் சமூகம் நீண்ட தூரம் சிந்திக்க வேண்டும்.
பேருவளை ஹில்மி
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments