திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-24

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-24


குறள் 969
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

மாப்ளை.. இந்த கவரிமா வைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கியா? அது மாட்டு வகையைச் சேர்ந்த ஒரு பெரிய 

மிருகமாம். ஒடம்புல இருந்து ரோமம் உதுந்துட்டா, அதால குளுரை தாங்க முடியாதாம். செத்தே பொயிருமாம் 
மாப்ளை. 

அது மாதிரி .. நம்ம ஆளுங்கள்ல  கொஞ்சவேரு சொரணை உள்ளவொளா இருப்பாவொ. மானம் போற மாதிரி 

அவொளுக்கு எதுவும் நடந்துட்டுன்னு வச்சுக்கோ.. அங்கினியே உசுரை  விட்டிருவாவொ மாப்ளை. 

குறள் 971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

மாப்ளை.. ஒருத்தனோட வாழ்க்கை ஒளிமயமா இருக்குன்னா, அதுக்கு அவங்கிட்ட இருக்க ஊக்கந்தான் காரணம். 

அந்த ஊக்கம் இல்லைன்னு வச்சுக்கோயேன்.. அவர் உயிர் வாழ்வதே இழிவு தான் மாப்ள. 

குறள் 972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

மாப்ள.. பொறந்திருக்க பொறப்பை வச்சு, நாந்தான் பெரியவன், நீ தாழ்ந்தவன்னு சொல்லி நமக்குள்ளயே 
ஒருத்தருக்கொருத்தரு அடிச்சுக்கிட்டு கெடக்கோம். 

அப்பிடில்லாம் ஒரு மண்ணாங் கட்டியுங் கெடையாது மாப்ள. யாரும் யாருக்கும் சளைச்சவொ இல்லை. யாரும் 

யாரைவிடவும் ஒசந்தவொளும் கெடையாது. எல்லாரும் ஒண்ணு போல தான். 

ஒரு சோலியை எம்புட்டு  தெறமையா செய்யுதமோ, அதை வச்சுத் தான் மாப்ள, மத்தவொ நம்மளை எடை 
போடுவாவொ. அதை வச்சு நமக்கு கெடைய்க்க மரியாதையோ கேவலமோ தான் மாப்ள நம்மளை பிரிச்சுக் 
காட்டும்.

குறள் 973
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

மாப்ள.. ஒருத்தன் அவன் இருக்க பொறுப்புல எம்புட்டு ஒசரத்துக்கு போனாலும், நல்ல பண்பு அவங்கிட்ட 
இல்லைன்னா அவன் ஒண்ணும் பெரிய மனுசங் கெடையாது. 

சின்ன பொறுப்புல இருந்தாலும், ஒருத்தங்கிட்ட மோசமான பண்பு இல்லண்ணா, அவன் மோசமானவன் இல்லை 
மாப்ள. 

குறள் 978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

நம்மூர்ல இருக்க கெளடு கட்டைகள்லாம் "நெறை கொடம் தளும்பாது. கொறை கொடந்தான் தளும்பும்" னு 
அடிக்கடி பொலம்புவாவொ. 

பெரிய ஆளுங்க எல்லாரும் என்னைக்குமே இருக்க இடந் தெரியாம ரொம்ப மரியாதையாத் தான் இருப்பாவொ. 

ஆனா இந்த அரைவேக்காடுக தான் தலைகால் புரியாம பெருசா பவுசு கொளிக்குங்க. 

குறள் 979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

நிறை குடம் மாதிரி அடக்க ஒடுக்கமா இருக்கது தான் மாப்ள பெருமை. 

வெட்டிப் பந்தா காட்டி  வாழ்றது இருக்க அது ரொம்ப கேவலமானது மாப்ள. (தொடரும்)
   

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post