தினம் தினம்
அழகையும் அழுக்கையும்
அழகுற காமித்தவன் நீ
ஒரு நாள்
நெற்றிப் பொட்டிற்காகவும்
மறுநாள் ஆடையை
சரிசெய்யவும் உதவிய நீ
கண்கள் மங்கி
முகம் பொலிவற்று
போன உன்முன்
சிரிப்பதென்ன
முறைப்பதென்ன
இவைகளை கண்டும்காணாத
புன்னகைத்துக் கொண்டே
நிலையாய் நிற்கும்
உன்னிடம்
முந்திக்கொண்டு முரண்படுகிறது
நீ உடைந்து மூளையில்
வீற்றிருந்த போதிலும்
தனக்கெதிராய்
இன்னொரு அழகென
முறைத்து பார்த்துக்கொண்டே
இருக்கும் வெற்றுச்சுவர்.....!
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments