ஹாகல - சின்ன கோமர - ரோட்டுகட 41
ஹுலுகங்கைப் பட்டினத்திலிருந்து பம்பரல்ல பிரதான பாதையில் மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் நூற்றாண்டைக் கடந்த குடியிருப்புக்களுள் ஒன்றாக ஹாகல விளங்குகின்றது.
தற்போது சுமார் இருபத்தைந்து குடும்பங்கள் வாழும் ஹாகலை, ஆரம்ப காலங்களில் இஸ்லாமியர் செல்வாக்குடன் விளங்கிய பகுதிகளில் ஒன்றாக விளங்குகியிருக்கின்றது.
உள்ளுர்க்குடிகளும் முஸ்லிம் தோட்டத் தொழிலாளர்களும் இணைந்த ஹாகலையிலிருந்து சமூக நலன் கருதி பல குடும்பங்கள் வெளியேறிச் சென்றிருப்பதை அறியலாம். தவளந்தன்ன கிராம அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட ஹாகலைக் குடியிருப்பின் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 110 ஆகும். ஹாகல பெருந்தோட்டத்திலிருந்து அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் குடியிருப்பின் ஒரு பகுதியில் மஸ்ஜித் அமைக்கப்பட்டிருக்கின்றது. நூறு வருடங்களுக்கும் முதலிலிருந்து மஸ்ஜிதில் ஜும்ஆ நடைபெற்று வருவதாகக் கூறப்படுவதுண்டு. தோட்ட நிர்வாகத்தால் மையவாடிக்கான நிலமும் வழங்கப்பட்டிருக்கின்றது. தற்போது முஹியத்தீன் மஸ்ஜிதின் நிர்வாகசபைத் தலைவராக ஜனாப் எஸ். லதீப் விளங்கி வருகின்றார்.
சின்ன கோமர
ஹாகலயிருந்து வடக்காக இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருந்த சின்ன கோமர குடியிருப்பு தற்போது முஸ்லிம்கள் இல்லாத பகுதியாக விளங்குவது வருந்துதற்குரியது. நீண்ட வரலாற்றைக் கொண்ட சின்னகோமரையில் அமைந்திருந்த ஜும்ஆ மஸ்ஜிதின் சில இடிபாடுகளை மட்டுமே இன்று காணமுடிகின்றது. கைவிடப்பட்ட மஸ்ஜித் நிலம் ஒரு பெருந்தோட்டத்திற்குச் சொந்தமாக விளங்கியதாகும்.
தற்போது இப்பெருந்தோட்டம் கண்டியைச் சேர்ந்த ஒரு சிங்களக்கனவானுக்குச் சொந்தமாக விளங்குகின்றது. சின்னகோமரையிலிருந்த கடைசி முஸ்லிம் குடும்பங்களும் 1988 -1989 ஆண்டுகளில் நாட்டிலேற்பட்ட உள்நாட்டுக் கலவரங்களால் அங்கிருந்து வெளியேறியிருக்கின்றனர். இவ்வாறு மத்திய பிரதேசத்திலலிருந்து அருகிச்சென்ற முஸ்லிம் குடியிருப்புக்கள் குறித்த ஆய்வுகள் காலத்தின்தேவையாகும்.
ரோட்டுக்கட
பன்வில - கபரகல பாதையில் ஹாதலையிலிருந்து மூன்றரைக் கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் ரோட்டுக்கடை கண்டி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்திருக்கும் கடைசி இஸ்லாமியக் குடியிருப்பாக விளங்குகின்றது.
பெருந்தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்தருக்கும் இக்குடியிருப்பு மவுஸா பஸார் (ஆயரளய டீயணயச) பட்டினத்துடன் இணைந்ததஒரு பகுதியாகும். மவுசா எஸ்டே;டடின் (ஆயரளய நுளவயவந) மத்தியில் இச்சிறு பட்டினம் அமைந்தருப்பதன் காரணமாக அது மவுஸா பஸார் என வழங்கப்படலாயிற்று. ஆரம்பத்தில் பன்வில - கபரகல பாதையில் ஒரு கடை மாத்திரம் இருந்ததன் காரணமாக அவ்விடத்தைச் சுற்றிய குடியிருப்பு ரோட்டுக்கடை என்ற பெயரில் ;பிரபல்யமடையலாயிற்று எனக்கூறுவர்.
பிரதேச செயலகப் பதிவுகளிலும் இப்பெயரே பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ரோட்டுக்கடையைச் சுற்றி கலாபொக்க எஸ்டேட், வட்டகல எஸ்டேட், நெலுகஸ் எஸ்டேட், நெல்லிமல எஸ்டேட் போன்ற பெருந்தோட்டங்கள் காணப்படுகின்றன. 1875-1900 காலப்படுதியில் ஒரு சில முஸ்லிம்கள் ரோட்டுக்கடைப் பகுதியில் முதலில் குடியேறியதாகக் கூறப்படுவதுண்டு. உள்ளுர் முஸ்லிம்களகை; கொண்டு அறிமுகமாகிய ரோட்டுக்கடை ஜமாஅத்தில் இன்று சுமார் 125 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றுள் சில முஸ்லிம் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களாகும்.
ரோட்டுக்கடை மஸ்ஜித்
ரோட்டுக்கடை மஸ்ஜித் வரலாறு ஐம்பது வருட காலத்தை அடைந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மஸ்ஜித் அமைக்கப்படுவதற்கும் முதலில் ; குடி;யிருப்பிலிருந்து ஒன்பது கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் ஹ{லுகங்கை மஸ்ஜிதுக்கு மக்கள் ஜும்ஆத் தொழுகைக்காகச் சென்றிருக்கின்றனர். அக்காலை குடியிருப்பைச் சேர்ந்த கனவான் அபுல் ஹஸன் என்பார் தனக்குச் சொந்தமான வாகனத்தில் ஜும்ஆத் தொழுகைக்காக மக்களை அழைத்துச் சென்ற நிகழ்வை இன்றும் மக்கள் நன்றியுணர்வோடு நினைவு கூர்வதுண்டு.
கனவான் அபுல் ஹஸன் தற்போதைய நிருவாக சபையின் பொருளாளராகப் பணிபுரியும் சகோதரர் முஹம்மத் முபாரக் அவர்களது தகப்பனாராவார். அன்னார் முஸ்லிம் குடும்பங்கள் வாழும் தோட்டப்பகுதிகளுக்குச் சென்று இப்பணியை நிறைவேற்றியுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும். ரோட்டுக்கடையில் முஹியித்தீன் ஜும்ஆ மஸ்ஜித் என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஜும்ஆ மஸ்ஜிதை அமைப்பதற்கான நிலம் 1982ம் ஆண்டு ஜனாப் அப்துல் ஹமீத் அவர்களால் வக்பு செய்யப்பட்டிருக்கின்றது. அப்துல் ஹமீத் அவர்கள் குடியிருப்பைச் சேர்ந்த ஜனாப் ஷரீப்தீன் அவர்களது தகப்பனாராவார்.
ஐம்பது பேர்சஸ் பரப்பைக் கொண்ட காணியில் ஆரம்பத்தில் ஓலைக் கொட்டிலாலான ஒரு மஸ்ஜித் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தது. இன்று சிறப்புடன் காட்சியளிக்கும் முஹியித்தீன் ஜும்ஆ மஸ்ஜித் நிர்மாணப்பணிகள் ரிபாயிய்யாத் தரீக்காவின் பெரியார் அஷ்ஷெய்க் அப்துர்ரஷீத் கோயாத் தங்ஙளால் (மறைவு-1998) துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மஸ்ஜித் பணிகளில் காத்திரமான பங்கு வகித்தவர்களுள் சென். ஜோன்ஸ் தோட்ட உரிமையாளர் கம்பளையைச் சேர்ந்த அல்ஹாஜ் ஷரப் குறிப்பிடப்பட வேண்டியவர்.
அவரின் மறைவைத் தொடர்ந்து அவரது புதல்வர் ஜனாப் ஷரப் பைஸல் அவர்களும் மஸ்ஜிதின் பணிகளுக்காக உதவிக்கரம் நீட்டிவருவதைக் குடியிருப்பாளர்கள் நன்;றிப் பெருக்குடன் நினைவு கூரிவருகின்றனர். சமீபத்தில் ஜனாப் ஷரப் பைஸல் அவர்கள் மையவாடிக்காக சென். ஜொன்ஸ் தோட்டத்திலிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை அன்பளிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு முதலில் கனவான் ரஹ்மான் ஷாஹ{ல் ஹமீத் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட காணி மையவாடியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
1990ம் ஆண்டு மஸ்ஜிதில் ஜும்ஆத் தொழுகை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அங்கு நீண்ட காலமாக சமயப்பணிபுரியும் மௌலவி முஹம்மத் நளீம் அவர்களது மகத்தான சன்மார்க்க சேவை இலங்கை முஸ்லிம்களுக்கோர் முன்மாதிரியாக விளங்குவதைக் குறிப்பிட வேண்டும். அவர் மஸ்ஜித் இமாம் பணிகளோடு முஸ்லிம் தோட்டத் தொழிலாளர்களது குடியிருப் புகளுக்கும் நேரடியாகச் சென்று மார்க்க போதனை புரிந்து வருவதுடன், அல்குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் பெரும் பணியிலும் தன்னை அர்ப்பணித்து வருகின்றார். குடியிருப்பைச் சேர்ந்த அதிகமான மாணவர்கள் மடுல்கலை, கலாபொக்க தமிழ் வித்தியாலயங்களுக்குச் செல்கின்றனர். குறிப்பிட்ட சில மாணவர்கள் மடவலை மதீனா தேசிய பாடசாலைக்கும் செல்கின்றனர்(தொடரும்).
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments