Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஆப்கானிஸ்தானில் உள்ள 6 மாகாணங்களில் பல்கலைக்கழகங்கள் திறப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள் அங்கு மூடப்பட்டன.

இதற்கிடையே, காபூலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷேக் அப்துல் பாக்கி ஹக்கானி, வெப்பம் மிகுதியாக இருக்கும் மாகாணங்களில் பிப்ரவரி 2 முதலும், குளிர் நிலவும் மாகாணங்களில் பிப்ரவரி 26 முதலும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள 6 மாகாணங்களில் பல்கலைக்கழகங்கள் நேற்று திறக்கப்பட்டன. மாணவிகள் சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

அங்குள்ள லாக்மன், நங்கர்ஹர், காந்தஹார், நிம்ரோஸ், பரா மற்றும் ஹெல்மண்ட் ஆகிய மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன. 

ஆட்சிப் பொறுப்பிற்கு பின் ஆப்கானிஸ்தானில் மாணவிகளுக்கு தனி வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்படும் என்று தலிபான் அதிகாரிகள் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments