Ticker

6/recent/ticker-posts

Ad Code



இதுவா சுதந்திரம்?


இன்று நாம் காணும் சுதந்திரம்?
எது சுதந்திரம்? இதுவா சுதந்திரம்?
அடுத்தவன் உயிரினை பரிப்பதும்
பஞ்சமென்ற நேரத்தில் பதுக்குவதும்
இதுவா சுதந்திரம்?

இயற்கையை இஷ்டப்படி அழிப்பது
செயற்கையாய் சட்டங்கள் வகுப்பது
இதுவா சுதந்திரம்? 

வேசம் போடும் மோசக்காரர்கள்
இன்றைய சில அரசியல்வாதிகள்
காசுக்காக ஓட்டை விற்றவர்கள்   
எம் சமூகத்தில் சில விஷமிகள்
 
நீதிக்காக அலைந்து ஓய்ந்து,
வீதியில் நிற்கும் வீணர்களாக
மக்கள் வீதியில் இன்று 
இதுவா சுதந்திரம்?

இலங்கை திருநாட்டில் 
இனியாவது பஞ்சம்
பட்டினி தீர்ந்து 
பாதுகாப்பாய் மக்கள் வாழ 
வழிபிறக்குமா? 

இன்றாவது  போராடிப் பெற்ற 
சுதந்திரத்தை பேணிக் காத்து,
சாதி, மத, மொழி, 
இன பேதம் களைந்து,
நாம் அனைவரும் 
இலங்கையர்கள் என்ற
ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம்.
ஒன்று பட்டால் 
உண்டு வாழ்வு...!

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

Vettai Email-vettai007@yahoo.com  

 

Post a Comment

0 Comments