ஈஸியாக 100 மதிப்பெண் பெற
சாவி சிறியது தான் ஆனால் ; அது பெருங்கதவைத் திறக்கிறது. விதை சிறியது தான் ஆனால்;அது பெரிய
விருட்சமாக வளர்கிறது. அணு சிறியது தான்ஆனால், அதன் ஆற்றல் அளப்பரியது. ஆம் அதைப்போன்றது தான் குழந்தைகளும், இளைஞர்களும் அவர்களின் திறமையும், ஆற்றலும், ஆக்கவழியில், நற்சிந்தனையுடன்
இச்சமூகத்திற்குப் பயன்படச் செய்வதே நம்தலையாய நோக்கம்.
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி, ஒரு சரித்திரம்
இருக்குது தம்பி 1 என்றார் நம் தமிழ்க் கவிஞர் ஒருவர். அதில் உயிர்ப்பு உள்ளது.
இதைத் தான் நம் விவேகானந்தர், ஆற்றல் மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள் புதியதோர் உலகை உருவாக்கலாம் என்றார்.
அந்த ஆற்றல், திறமை, மேலும் மேலும் வளர மிகவும் தேவையானது கல்வி. கல்வியே நம்மை வளர்க்கும், நம்மை
இனம் காட்டும், சமூகத்தில் உயர்வளிக்கும், வாழ்வில் வளம் சேர்க்கும் அத்தயை சிறப்புமிக்க கல்வியை நாம் எந்த சூழலிலும் இழந்து விடக்கூடாது.
கல்வி என்பது ஒரு சொத்து, அதை எப்படியாவது அடைந்து விட வேண்டும்! சரி. எப்படிப்படிப்பது?
எதைப் படிப்பது? எந்த அளவு படிப்பது? நானும் முயன்று தான் படிக்கின்றேன். ஆனால் மறந்துவிடுகிறதே!
நினைவில் இருப்பது இல்லையே!நான் என்ன செய்வது?... அன்பு மாணவர்கள் நீங்கள் இதுபோல் எல்லாம் கேட்பது
என் காதில் விழுகிறது.
அச்சம் விலகி, திறமை மிளிர குறைந்த மதிப்பெண் பெறுபவர் நிறைந்த மதிப்பெண் பெறவும், நல்ல மதிப்பெண்
பெறுபவர் மாநில அளவில் முதலிடம்பெறவும் வள்ளுவர் கூறும் வழியைப்பாருங்கள்... கற்க கசடறக் கற்பவை
கற்றபின் நிற்க அதற்குத் தக.(குறள் 391)
படிக்க வேண்டிய நூல்களைத் தேர்ந்தெடுத்து, அதனைக் குற்றமற உணர்ந்து படிக்க வேண்டும். அவ்வாறு,
படித்தபின் அதனால் கிடைத்த நல்வழியில் நிலையாக நின்று, அக்கருத்துகளைப் பின்பற்றி வாழ வேண்டும்
என்பது நேரிமையான பொருள். இக்குறள் மூலம் மாணவர்களுக்கு வள்ளுவர் கூறும் மந்திரம் என்னவென்று காண்போம்.
கற்க -படிக்க வேண்டும். சரி இதனைக் குறளின் ஏழு வார்த்தைகளிலும் பொருத்தி, பொருள் புரிந்து கொண்டால்
வெற்றியின் சூட்சுமம் உங்கள் கரங்களில் தவழும்.
அதாவது கற்க-படிக்க வேண்டும்-ஆழ்ந்து படிக்க வேண்டும். ஆழ்ந்து உணர்ந்து படிக்க
வேண்டும் கசடறக்-படிக்க வேண்டும்-அரைகுறையாக இன்றி, பொருள் புரிந்து, முழுமையாகப்படிக்க வேண்டும் கற்பவை-படிக்க வேண்டும்-தேர்விற்கு எது தேவை? எனஅறிந்து அதற்குரிய ஆயத்த நிலையில், ஆசான் கூறிய அறிவுரைப்படி படிக்க வேண்டும். கற்றபின்-படிக்க வேண்டும்.
அவ்வாறு படித்தபின் அதனை மீண்டும் மீண்டும் (Revision)நினைவில் நிறுத்திப்படிக்கவேண்டும். நிற்க-படிக்கவேண்டும்- கற்றவை மனத்தில் நிற்கும்படியாக படிக்க வேண்டும்.
பலவளம் தரும் கல்வி நம்மிடம்நிலைக்க வேண்டும் அதற்காகப்படிக்க வேண்டும் தக - படிக்க வேண்டும் - பெற்றோர் மகிழ, நாடு நளம் பெற, ஆன்றோர் வாக்கு பலித்திட, தக்கவாறுநாம்படிக்க வேண்டும்.
ஆகா ! என்ன அருமையான ஒரு வாழ்க்கைத் தத்துவத்தை ஏழு வார்த்தைகளில் திருவள்ளுவர் படம்
பிடித்துக்காட்டிவிட்டார். பார்த்தீர்களா? இதன்வழி, படித்தால் தமிழ், ஆங்கிலம், கணிதம், கணிணி, அறிவியல் என
எதனையும் நாம் எளிதாக கற்று வாழ்வில் ஜொலித்திடலாம். ஆம் மாணவர்களே குறள் காட்டும் வழியில் நடை
பயின்று வாழ்வில் உயர்வோம். நலம்பல அடைவோம்.(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments