Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் ஒப்புவித்தல் உலக கின்னஸ் சாதனைப் போட்டி


12-02-2022 அன்று கனவு மெய்ப்பட படைப்பகம் சார்பாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை  உலக சாதனை முயற்சியாக  Google Meet காணொளி மூலம் காலை 9-30 மணி முதல் மாலை வரை நடைபெற்றது.

100க்கும் அதிகமான மாணவச் செல்வங்கள் பங்கேற்றுத் தங்களுடைய திறனை வெளிப்படுத்தும் விதமாக குறள் மழை பொழிந்தனர்.


நிகழ்விற்கு தமிழ்ச் செம்மல் திருக்குறள் தூதர்,குறள் யோகி முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் இருந்து மாணவர்களை நெறிப்படுத்தி., உற்சாகமூட்டி எழுச்சிமிக்க உரையாற்றினார்.


திருமதி பிரபாசெந்தில் அவர்கள் தலைமையில், திருமதி
லலிதாம்பிகை.,மற்றும் திருமதி பூர்ணிமா உள்ளிட்ட மகளிர் குழுவினர் பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மாலையில் நடுவராகப் பணியாற்றிய திருக்குறளார் மு.க. அன்வர் பாட்சா அவர்களின் இல்லம் வந்து நேரில்,அவருக்குச் சிறப்பு செய்து.,அவரிடம் வாழ்த்துக்கள் பெற்றதுடன்,அவர் கரங்களால் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக 1330 திருக்குறள்களை ஒப்புவித்தல் செய்யும் மாணவர்களுக்கு ரூபாய் 25,000 /= வழங்கும் தகவலைக் கூறி அதனைப் பெற அனைவரும் முயற்சிக்க வேண்டுமென அன்வர் பாட்சா அவர்கள் அறிவுறுத்தினார்.

அனைவரும் மகிழ்வுடன், மனநிறைவாக விடைபெற்றுச் சென்றனர்.

தகவல்
வேட்டை தமிழ் நாடு நிருபர் 


Vettai Email-vettai007@yahoo.com    

Post a Comment

0 Comments