Ticker

6/recent/ticker-posts

திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி இனவாதத்தை தூண்டுகிறதா?

மிகவும் கவலையான செய்தி .

ஒரு பாடசாலை இனவாதத்தை தூண்டும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது.ஒரு பெண்ணின் உடைக்கு எதிராக போராட்டம் செய்வது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்றைய சூழ் நிலையில் சிறுபான்மை மக்களின் ஒற்றுமை மிகவும் அவசியமானதொன்று.அந்த ஒற்றுமை பாடசாலைகளிலிருந்துதான்  ஆரம்பிக்கப்படவேண்டும்.நல்லது கெட்டது எது என்பதை பாடசாளைகளிளிருந்துதான் பிள்ளைகள் தீர்மானிக்கின்றார்கள்.

அதற்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.ஒரு சமுதாயத்தை ஒழுக்கமான சமுதாயமாக கட்டி எழுப்பும் பொறுப்பு ஆசிரியர்களின் கையில்தான் இருக்கின்றது.

அதனால்தான் மாதாபிதா குரு தெய்வம் என்று சொல்லுகின்றோம்.

ஆனால் இன்று  நடப்பது என்ன ?

ஒழுக்கத்தை கற்பித்துக்கொடுக்கும் பாடசாலையே ஒழுக்கமாக உடை அணிந்து வந்த ஆசிரியையை உதைத்து  வெளியேற்றியுள்ளது.

வெளியாட்களை வைத்து மிரட்டி,கழுத்தை நெரித்து வெளியேற்றிய சம்பவம் மிகவும் வேதனை அளிக்கின்றது.மாணவர்களையும் தூண்டிவிட்டு கலவரத்திற்கு தூபம் போட்டுள்ளார்கள் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் 

திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில்தான் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.

ஒரு பெண் ஒழுக்கமான உடை அணிவதால் அடுத்தவர்களுக்கு என்ன பிரச்சினை என்று புரியாத புதிராய் இருக்கின்றது.

ஹிஜாப் என்பது ஒழுக்கத்தின் அடையாளம் .மதத்தின் அடையாளம் அல்ல.அதை மத அடையாளமாக மாற்றியது ,மாற்ற நினைப்பது அத்தனையும் தூரத்தில் இருந்து பார்ப்பவர்கள்தான்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் பிள்ளைகளை இளவரசியைப் போன்றுதான் பார்ப்பார்கள்.பெண் பிள்ளைகளுக்கு என்று விசேஷமான கவனிப்பு இருக்கும்.

இது சாதரணமாக ஏழைகள் முதற்கொண்டு பணக்காரர்கள்வரை இருக்கின்ற ஒன்று.

அதனால்தான் பெண்களை மிகவும் பெறுமதிவாய்ந்த வைரமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்லுகின்றார்கள் .

உலகில் பெறுமதியான பொருட்களை நாம் மிகவும் பாதுகாப்பாகத்தான் வைப்போம்.சில பொருட்களை தூரத்தில் இருந்து பார்க்கலாம் ரசிக்கலாம் ஆனால் தொட முடியாது.

அதுபோல்தான் எல்லாப் பெற்றோர்களும் தங்கள் பெண் பிள்ளைகளையும் பொக்கிஷமாக பாதுகாத்து வைப்பார்கள். 

அப்படி வளர்க்கப்பட்ட ஒரு ஆசிரியைக்கு திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடமில்லை என்று தூக்கி எறிந்துள்ள விடயம் மிகவும் பாரதூரமான ஒரு விடயம்.

சிறுபான்மை இன தலைவர்கள் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.இப்படியே இந்தப் பிரச்சினை தொடருமாயின் எதிகாலத்தில் சிறுபான்மை மக்கள் மிகவும் மோசமான ஒரு நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இந்த விடயம் ஒரு மதக் கலவரமாகவும் மாறக்கூடும்.

காலை 7.10 மணிக்கு பாடசாலைக்கு சென்றும் அந்த ஆசிரியைக்கு கையெழுத்து வைப்பதற்கு அனுமதிக்கவில்லை.வெளியாட்களை அழைத்து அந்த ஹபாயா அணித்திருந்த ஆசிரியை தாக்கியுள்ளார்கள் 

நீண்ட காலமாக நடந்த இந்த வழக்கிள் நீதி மன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாம்.பாடசாலைக்கு சம்பந்தமில்லாத ஒரு விடயத்தை மதக் கலவரமாக மாற்ற முற்படுபவர்களை கண்டறியப்படவேண்டும். 

சமூக வலைதளங்களில்  மிகவும் மோசமான முறையில் பதிவுகள் வருகின்றன.

ஆகவே தலைவர்கள் என்று பாராளுமன்றத்தில் வீர வசனம் பேசுகின்றவர்கள் முன் வந்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டு கொள்கின்றேன்

ஒன்று மட்டும் விளங்கவே இல்லை பெண் உரிமை ,பெண் ஒழுக்கம் பற்றிப் பேசுபவர்கள் பெண்கள் ஒழுக்கமாக உடை அணிந்தால் ஏன் கதறுகின்றார்கள்?

புரியவே மாட்டேங்குது  




Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments