Ticker

6/recent/ticker-posts

குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-85 (செந்தமிழ் இலக்கியம்)


பேரின்பம் காண...
ஆற்றல் நிறைந்தவர்களே ! உலகைப் புரிந்து கொள்ள, மனம் திதைவடை வாழ்வில் அமைதி தவம் போன் நிலை காண திருவள்ளுவப் பேராசான் கூறும் வழியாது? என்பதே இன்று நம் மனத்தை மையமிட்டுள்ள அருங்குறளாகும். ஒருமுறை நண்பர் ஒருவர் எம்மிடம், திருவள்ளுவர் இயற்கை குறித்து ஏதாவது கூறியுள்ளாரா? என வினவினார். அருமையான வினா, ஒருமுறை அல்ல; ஒரே குறளில் இருமுறை இயற்கை குறித்துக் கூறி வாழ்வியல் தத்துவம் குறித்து உணர்த்தி உள்ள குறள்மணியே இங்குநாம் காணப்போவது அக்குறள்

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். (குறள் 370) என்பதாகும்.

இதன்பொருள்:தணியாத இயல்புடைய ஆசை அறும்போது அந்நிலை அழிவற்ற இயற்கையோடு ஒன்றிநிற்கும் பெருநிலைக்கு இட்டுச் செல்லும் எனப்பொருள் கூறுவர்.

சரி... ஆசைப்படுவது தப்பா? ஆசைப்படாவிட்டால் உலகில் எந்த வளர்ச்சியும் இருக்காதே. திருவள்ளுவர் ஏன் இப்படிக் கூறினார்? அவர் கூறியதன் உட்பொருள் என்ன? அவர் எதை உணர்த்த விரும்புகிறார்? வினாக்கள் தொடர்கின்றன அல்லவா?... இதோ. அவர் உள்ளத்தைச் சற்று நெருங்கிச் செல்வோம். இக்குறளுக்கு அறிவியல் ரீதியாகப் பொருள் உணர்வோம்.

நம் உடல் நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என்னும் ஐந்து பூதங்களின் கூட்டுத் தயாரிப்பு என்பது மறுக்க இயலாத அறிவியல் உண்மை தானே!

இவ்வைந்து பூதங்களே அண்டத்தில் வியாபித்து உள்ளன. இந்த பேரண்டத்தில் உள்ள ஆற்றல் ; நிறைந்த ஆற்றல் மிக்க இயற்கையாகும். இது என்றும் உள்ளது ; அழிவற்றது ; உண்மையானது ஆதலின், குறளாசன் இதற்குப் பேரா இயற்கை” எனப்பெயரிட்டார்.

இதைத் தான் “அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது” என்பர் முன்னோர்,

நிலம் - வலுவான பகுதியில் இருந்து நெகிழ்ச்சியான பகுதியை நோக்கி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சரிந்து தன்னை நிரப்பிக் கொள்கிறது. அதாவது கண்டப்பெயர்ச்சி அடைந்து தன்னைவிரிவாக்கிக்கொள்கிறது.
நீர் - மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து பூமிக்குள்ளும் சரி ; வெளியிலும் சரி - தன்னை நிரப்பிக் கொள்ளும் போராட்டத்தையும் காலங்காலமாகச்செய்து தன்னை விரிவாக்கிக் கொள்கிறது.

நெருப்பு - ஒளிக்குக் காரணமான நெருப்பு தான் பபற்றிய இடத்திலிருந்து பற்றாத இடம் நோக்கி விரிந்து பரந்து தன்னை நிரப்பிக் கொள்ளும் இயல்பு உடையது.

காற்று அழுத்தம் நிறைந்த இடத்தில் இருந்து அழுத்தம் குறைந்த இடத்தை நோக்கி ஓயாமல் வீசித் தன்னை நிரப்பிக் கொள்ளும் செயல் காலங்காலமாய்ச்செய்கிறது.

வான் - நிரம்பிய வெட்ட வெளி. எல்லையற்றது. எங்கும் நிறைந்து வியாப்பித்துள்ளது. இது உலகியல் இயற்கை. உண்மை , உலகறிந்தது இது பேரா இயற்கை.

சரி, மேற்கண்ட ஐந்து பூதங்களின் கூட்டால் உருவான, இவ்வுடலில்
உள்ள இயற்கையானது தன்னை விரிவாக்கம் செய்ய இயலாமல், நிறைவடையாத, நிரம்பாத இயற்கையாக உள்ளது. எனவே இதற்கு எப்போதும் நிரம்பாத இயற்கை அதாவது ஆரா இயற்கை' என்று கூறினார். ஆரா இயற்கைக்கு “அவா” என்ற பெயரும் சூட்டினார் குறள்வேந்தர்.

ஒரு வகையில் நிலைத்த உயிர் ஆற்றலை, நிலையாத உடலிற்குள் இணைத்து வைக்கும் இணைப்பு உருகியே ( FUSE ) அவா எனப்படும் பேராசை. இந்த அவாவைத் தாங்கி நிற்கும் (FUSE CARRIER ) தான் மனம் இந்த மனமேதத்தளிப்புகளுக்குக் காரணம்.

மனித வாழ்வின் அடிப்படைத்தத்துவம் அன்பு;அதன்வழியான அருள் அருளுணர்வுடன் கூடிய இல்லறத்தில் துறவறம் ; அதில் லயித்த தவம் ; தவத்தின் வழியே மெய்யுணர்தல் எனப் படிப்படியாகப் பக்குவம் பெறுதல் “வறுத்த விதை மீண்டும் முளைக்கும் ஆற்றலை இழப்பது போல்” தவத்தால் வறுபட்டு 'அவா என்னும் இணைப்பு உருகியை நீக்கி உயிர் ஆற்றலை பேராற்றலுடன், மூல ஆற்றலுடன், பிரபஞ்சத்துடன், அதாவது பேரா இயற்கையுடன் சேர்த்துவிடுவது. அதாவது Direct Connection இப்போது புரிகிறதா?.

இதைத் தான் நம் ஞானச் சித்தர், “தவம் செய்க ; ஆன்ம விசாரனை செய்க; இயற்கையை உணர்க; வேண்டுவதை நீங்களும் பெறுக என்கிறார். இயற்கையை உணர்வோம் ; அதனோடு இணைவோம் ; பேரின்பம் காண்போம். அனைவரும் நலம்பெற்று வாழ்வோம்.(தொடரும்)


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

0 Comments