Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஏனிந்த வன்மம்!


மாண்பை நெரித்து 
மாணவிகளை வதைத்து
மத இணக்கத்தை சிதைத்து 
மனிதத்தைப் புதைத்து விட்டார்களே

நீதியற்ற ஒருசிலரின் 
நிகழ்ச்சிநிரல் நிறேவேற
சமூகங்களின் உறவை
சல்லடையாக்கி விட்டார்களே

ஆடையால் சீடர் கல்வி 
சோடை போகாதென்பதை
சுய விசாரணை செய்யாமலே
சூடேற்றி விட்டார்களே

கலாச்சாரத்தை  
அனாச்சார கண்ணாடியால் பார்க்க 
பிரச்சாரம் செய்கிறார்களே

ஐக்கியம் என்கின்ற 
ஆடையை உரிந்து 
இன அன்னியோனியத்தை
அம்மணமாக்கி விட்டார்களே

உடை ஒருபோதும்
தடை போடாது கல்விக்கென்பதை
எடை போடாமல்
இறங்கி விட்டார்களே

அறிவும் திறனும் ஒழுக்கமும்தான்
அணி செய்யும் கல்விக்கென்பதை
அறிந்திருந்தும் ஆடைக்காய்
நெறிபிறழ்ந்து அணிதிரண்டார்களே

கொறோணா மரணம் 
கல்லறையில் காட்டிய இணக்கத்தை
சில்லறைப் பிரச்சினையால்
சிதைத்துக் கொண்டிருக்கிறார்களே

Vettai Email-vettai007@yahoo.com


 


Post a Comment

0 Comments