Ticker

6/recent/ticker-posts

Ad Code



நாங்கள் யார்.......?


"ஆடு 
மாடுகளை போல 
வீதியெல்லாம் உலாவுகிறோம் 
பல மன்னர்களை 
உறுவாக்கிய 
தேசத்தின் மக்களாகிய நாங்கள், 

அண்டை 
நாடுகளோடு 
கைகுலுக்கி வரவேற்று 
கொடுத்தனுப்புகிறார்கள் 
மன்னர்கள், 
இந்நாட்டு மக்களை 
வீதியெல்லாம் 
கையேந்த வைத்துவிட்டு, 

சாதம் 
போட்டு சாப்பிட 
வேண்டிய பாத்திரத்தில் 
தாளம் போட்டு வீதியெல்லாம் 
உலாவுகிறார்கள் 
சொந்த நாட்டு அகதிகளாக , 

புத்தகத்தை 
சுமக்க வேண்டிய விரல்கள் 
வலிகளை சுமக்கிறது 
சுமந்த 
கம்பத்தில் 
சுருக்கம் 
விழுந்து கிடக்கிறது  
வறுமை சாயம் 
பூசிய தேசியக்கொடி , 

உழைத்து 
உருவாக்கிய 
கோட்டையில் வாசலிலே 
கூடாரம் 
அமைத்துக்கொண்டு 
வீதியெல்லாம் 
கையேந்தி நிற்கிறார்கள் 
மன்னர்களின் மக்கள், 

வீதியெல்லாம் 
வீடுகளாகிவிட்டது 
குடியிருந்த 
வீடெல்லாம் 
கோட்டைகளாகி விட்டதனால் , 

கையேந்தும்  
கைகளின் 
விரல்களுக்கு 
நெருப்பை வையுங்களேன்  
அவைகள் தானே 
மன்னர்களாக 
உங்களை 
அதிகார 
பசியை நுகரவைத்தது...!

Vettai Email-vettai007@yahoo.com


 


Post a Comment

0 Comments