Ticker

6/recent/ticker-posts

Ad Code



தன்முனைக் கவிதைகள்


என்னை மறந்தாலும் 
உன்னை நினைவில் 
வைத்துக் கொள்கிறது 
என்னுடைய நினைவுகள்

ஜன்னலத் திறக்காமலே 
கண்டுகொண்டேன் 
தென்றலாய் மிதந்து வந்து 
நீ கதவுகளைத் தட்டும் போது

உனது பயணப் பாதையில்
மலர்கள் உதிர வேண்டும்
எனது மனமெங்கும்
மென்மையின் சுவாசம்

எதிரெதிரே சந்தித்தபின்னும்
எனது மௌன மொழிக்குள்
கவிதை எழுதிச் செல்கிறாள்

காலமெல்லாம் ஒரு ரசிகை
எனக்குள் யாசிக்கும் 
சொற்களத் தேர்வு செய்கிறேன்
முனைப்புடன் நிற்கின்றன

நமது கவிதைக்கானகாட்சிகள்
கனியும் காலத்தோடு 
கைகோக்கக் காத்திருப்போம்...
உறவுகளின் ஆலாபனைகள்
தோரணம் கட்டி கொண்டாடும்

Vettai Email-vettai007@yahoo.com  



Post a Comment

0 Comments