1.
முகூர்த்தம் பார்க்க
மலர்ந்த பூக்கள்
கண்ணீர் துளிகளில்
நனைந்து கசிங்கின
2.
மேளத்தின் ஓயாத
கண்ணீர் ஓலம்
கட்டியனைத்து பறிமாறும்
மலர்வண்ணன் காதை
3.
நிரம்பி வழியும்
பூ மாலைகளில்
நித்திரை கலையட்டும்
நிதர்சனக் கேள்வியது
4.
மேளம் நீளும் ஓலத்தில்
துள்ளும் சிறுவர்கள்
ஒலிப்பெருக்கியின் முட்டாகும்
முண்டாசு தாத்தா கைத்தடி
5.
இரு கரம் பிடித்து
இதயக்கண்ணீர் வடித்து
தூங்காமல் எதிர்நோக்குகிறது
கடைசி மகன் வருகையை
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments