"ஆறாம் விரல்".

"ஆறாம் விரல்".


ஒரு கடிதம்
ஒருவன் காதலில் நுழைகிறான்
ஒருவன் மனம் பிறழ்கிறான்

ஒரு தீர்ப்பு
ஒருவன் சிறகை விரிக்கிறான்
ஒருவன் சிக்கிக் கொள்கிறான்

ஒரு விண்ணப்பம்
ஒருவன் பணியில் அமர்கிறான்
ஒருவன் விடுவித்து போகிறான்

ஒரு உண்மை
ஒருவன் புரட்சி செய்கிறான்
ஒருவன் ஒளிந்து வாழ்கிறான்

ஒரு பொய்
ஒருவன் தலைவன் ஆகிறான்
ஒருவன் பதவியை துறக்கிறான்

ஒரு ஆவணம்
ஒருவன் மண உறவு காண்கிறான்
ஒருவன் மனமுடைந்து மாள்கிறான்

ஒரு தேர்வு
ஒருவன் வெற்றியில் துள்ளுகிறான்
ஒருவன் தோல்வியில் துவளுகிறான்

ஒரு கவிதை
ஒருவன் கவிஞன் ஆகிறான்
ஒருவன் ரசிகனாகிப் போகிறான்

ஒரு சிறுகதை
ஒருவன் பாதையை மாற்றுகிறான்
ஒருவன் அயலானைத் தூற்றுகிறான்

ஒரு நாவல்
ஒருவன் மனங்களை கற்கிறான்
ஒருவன் சரித்திரமாகி நிற்கிறான்

ஒரு செய்தி
ஒருவன் களங்கம் கற்பிக்கிறான்
ஒருவன் நற்பெயர் பெறுகிறான்

ஒரு காகிதம்
ஒருவன் ஆசிரியர் ஆகிறான்
ஒருவன் மாணவனாக மாறுகிறான்

ஒரு ஒப்பந்தம்
ஒருவன் கலகம் மூட்டுகிறான்
ஒருவன் அன்பு காட்டுகிறான்

சமூகத்தை புரட்டிப் போடுகிற
வலிமையான பேனாமுனையே
அற்புதமான " ஆறாம் விரல் "...


Vettai Email-vettai007@yahoo.com

1 Comments

  1. சமூகத்தை புரட்டிப் போடுகிற
    வலிமையான பேனாமுனையே
    அற்புதமான " ஆறாம் விரல் "...

    நிச்சயமாக தர்மரே... அருமைக்கவிதை

    ReplyDelete
Previous Post Next Post