Ticker

6/recent/ticker-posts

Ad Code



சண்முகா மகளிர் கல்லூரி விவகார‌த்தில் தொடர்ந்தும் அரங்கேறும் அராஜகம்

தேர்தல் காலங்களில் முஸ்லிம் உரிமைகளைப் பெற்றுத் தர வரிசையில் நின்ற வீரத்  தலைவர்கள் மௌனம் 
கடந்த புதன் கிழமை திருகோனமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு அபாயா அணிந்து சேவைக்கு  சென்றதற்காக தாக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியை இன்று ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி உள்ளார்.

ஒரு அரச நிறுவனம் ஒன்றில் அனுமதி இன்றி அத்துமீறி பிரவேசித்து, அரச சேவையாளரின் சேவைக்கு குந்தகம் விளைவித்து, அவரது சேவை நேரத்தின்போது அவரைத் தாக்கியவர்களுக்கு ஏதிராக
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் இன்று  ஆஸ்பத்திரியை விட்டு வெளியேற்றப்பட்ட  குறிப்பிட்ட ஆசிரியை, தான் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறும் அளவுக்கு தனது உடல் நிலை  சீரானதாக  இல்லை என்றும்,தான் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேற்றப்பட்டது தனக்கு நடந்த மேலும் ஒரு அசாதாரணம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆஸ்பத்திரியில் எந்தவித காரணமுமின்றி அனுமதிக்கப்பட்டுள்ள அதிபர் இன்னும் ஆஸ்பத்திரியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இனங்களுக்கிடையிலான முறுகள் நிலைகளை ஏற்படுத்த  எத்தனிப்போர்,  முறுகலை ஏற்படுத்துவேர்களுக்கான
தனியான போதியளவு சட்டம் நாட்டில் அமுலில் உள்ள போது இவர்களுக்கு எதிராக சட்டம் பாயமல் இருப்பது ஏன்.?

எந்தப் பாடசாலையில் போய் கடமை செய்தாலும் தனக்குரிய வேதனம் கிடைக்கும் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி, சமூக உரிமைக்காக போராடி நீதிமன்றம் வரை சென்ற ஒரு சகோதரிக்கு உதவ நாதியற்றவர்கள்  தலைவர்களாக இருப்பது ஒரு கவலைக்குரிய  விடயமாகும்.

தேர்தல் காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வரிசையில் நின்ற பலர், உரிமையைப் பாதுகாக்கும் விடயத்தில்  தலைமறைவாகி இருப்பது
முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் எதிர்கொண்டு வரும் துரதிஷ்டவசமான நிலைகளில் ஒன்றாகும்

( பேருவளை ஹில்மி)


Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments