Ticker

6/recent/ticker-posts

Ad Code



நெல்வயலும் கிராமத்து தேவதையும் .!


நன்டுகளும் நத்தைகளும் 
நடக்கும் வயல்வரப்புகளில்  
நடைப்பயில்கிறது 
தேவலோக தேவதை, 

வளர்ந்த நெல்மணிகள் 
வயது முதிர்ந்ததாக  
தரை நோக்கிதலை 
சாய்த்து நிழலுகின்றன 
தேவதைகளின் அழகுகளால், 

தீண்டாத கைவிரலாள் 
தீண்டுவதால் பச்சை 
நெல்மணிகளுக்குள் 
மஞ்சள் நெற்கதிர் 
ஆரவாரம் கொழுகின்றன, 

மலராத மல்லி பூ 
மதிக்கொண்டு 
மறுமலர்ச்சியோடு  
கொண்டையில்  ஏறிக்கொள்கிறது 
தேவதைகளின் புல் தரை 
தளத்தில் சிதறுகிற மல்லித்தழையாக, 

புல் பூண்டுகளை 
தடவியே ஒலிகளை 
ஒலிருகிறது 
கொலுசும் மெட்டி ஒலியும், 

பச்சை பாய் 
விரித்து பளிங்கு 
கல்லில் கொத்துக்கொத்தாக 
கொக்கரிக்கிறது நெற்கதிர், 

மல்லிகை 
பூ உதிராத
பச்சை இலையில் உதிருகிறது 
ஜடையில் தொங்கிய 
மல்லி குரங்குகளின் கூடைப்பந்தாக....!!! 

தலை சாய்த்து 
பூமியை தாங்கி 
பேசி கொள்கிறது 
விளைந்த நெற்கதிர் 
வளர்ந்த புடவைக்காரிக்கு, 

தலை உயர்த்தி 
தழைகளை கொத்தி 
கொழுக்கிறது  மூக்குகள் 
கொண்ட வெள்ளைப்பூக்கள், 

கட்டமான வரி 
வரப்புகளுள் 
நீரை கக்குகிறது 
நீந்தாத  நீர்பறவை, 

அரிவாளை கண்டு 
மெல்ல இசைப்பாடுகிறது  
நெற்கதிர் கழுத்தை 
தலை சாய்த்து, 

நெற்கதிரில்  
கூண்டுகள் கட்டிய 
சிட்டுகள் கொண்டையை  
கொதருகிறது 
கூண்டுகுள் அரிவாள்  அகப்பட்டதால், 

தென்னங்கீற்று 
சல சலப்பு
ஒலியில் வளைந்து 
நெளிந்து தலை 
சாய்த்து பூமியை 
மித்தமிடுகிறது
நெல்மணிகளும்  
தேவதையும் ".........!! !!! 


Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments