மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-43 (வரலாறு-பாகம்-2)

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-43 (வரலாறு-பாகம்-2)


அரத்தனையின் கல்வி வரலாறு 43
அரத்தனையின் கல்வி வரலாறு  எழுபத்தைந்து ஆண்டுகளையும் கடந்து செல்வதாகப் பேசப்படுவதுண்டு. 

முன்னர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் இயங்கிய அரசினர் பாடசாலையில் முஸ்லிம் மாணவர்களும், தமிழ் மாணவர்களும் இரண்டறக் கலந்து  பாடம் படித்ததாகக் கூறப்படுகின்றது. 

பாடசாலை நீண்ட காலமாக  பெரியார் ஸெய்யித் முஹம்மத் அவர்களது வீட்டின் ஒரு பகுதியில் இயங்கி வந்ததாக அக்காலை ஆசிரியர்களுள் ஒருவராகப் பணிபுரிந்த தவுலகலை - ஹந்தஸ்ஸயைச் சேர்ந்த ஜனாப் எம். எச். ஜெய்னுதீன் ஆசிரியர் வழங்கிய தகவல்களிலிருந்து அறிய முடிகின்றது. 

1963ம் ஆண்டு முஸ்லிம் பாடசாலையாகப் பிரகடனப் படுத்தப்பட்ட அரத்தனப் பாடசாலை தற்போது வரகலந்த முஸ்லிம் வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கி வருகின்றது. பாடசாலை அமைந்திருக்கும் இரண்டு ஏக்கர் மூன்று ரூட்  பேதினேழு பேர்சஸ் பரப்பளவு  கொண்ட நிலம் நுடயயனi நுளவயவந தோட்டத்திலிருந்து அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டதாகும். 

பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்களும்  சேர்ந்து கற்கும் வரகலந்த முஸ்லிம் வித்தியாலயத்தின் மாணவர் எண்ணிக்கை ஐம்பத்தாறு எனப்பாடசாலை ஆவணங்கள் உறுதி செய்கின்றன.  

ஏழு ஆசிரியர்கள் பணிபுரியும் பாடசாலையின் அதிபராக உடத்தலவின்னையைச் சேர்ந்த ஜனாப்  டீ. யு. நளீம் பணிபுரிந்து வருகின்றார். அவரது தகப்பனார் ஜனாப் புஹார்தீன் அவர்களும் இப்பாடசாலையில் அதிபராகப் பணிபுரிந்த பெருமைக்குரியவர். (தொடரும்)

 
Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post