உயிராய்.. வருவதே நட்பு!

உயிராய்.. வருவதே நட்பு!


உறவில்லாமல் உறவாய்..
உயிரில்லாமல் உயிராய்..
வருவதே நட்பு
எங்கும் பிறக்கலாம்
எளிதில் கிடைக்கலாம்
தூய அன்பு
உன்னை முழுமையாக்கும்
அன்பின் அம்பு
நட்பு மட்டுமே...
நம்பு தோழமையே!
காதோரம் கிசுகிசுப்பில்
தெரியாமல் தருகின்ற
ஒரு நறுக்கென்ற
கிள்ளலில்
பெற்றவருக்கே 
தெரியாத ரகசியங்களில்
வரமாகும் நறுநட்பு..
எல்லை தாண்டிய
அனுசரித்தலில்
மகோன்னதமான
புரிந்துகொள்ளலில்
மேன்மையாகும்
இக்கேண்மை!
விருப்பு வெறுப்புக்களை
விரும்பி ஏற்று
இன்ப துன்பங்களை
இனிதாய்ப் பகிர்ந்து
சொந்தங் கொண்டாடும்
சொத்து
நட்பு அன்றில் வேறில்லை!
நிழல் போன்று
குளிர்விப்பதும்
குடை போன்று
துணை நிற்பதும்
சினேகமின்றி வேறில்லை
கடற்கரையில் வீசுகின்ற
குளிர்ந்த காற்றாய்
வைகறையின் வெளிச்சமாய்
வானவில்லின் நிறமாய்
சிலிர்க்கச் செய்கின்ற
மழைத்துளியாய்
உள்ளச் சிறுமியைத்
தட்டியெழுப்பும்
சிறு விளையாட்டாய்த்
தோழமை
தோள் வரும்...
கூடவே நிழலாகத்
தொடரும்...


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post