Ticker

6/recent/ticker-posts

மழை மேகம்!


அந்திநேர மாலைப்பொழுதில் 
மழை மேகங்கள் வானத்தை 
கருப்பு குடையால் மூடத்தொடங்கியது, 

வானத்தில் பறந்த பறவைகள் 
கருப்பு குடையினை கண்டு 
மரக்கிளைகளில் ஒளியத்தொடங்கியன 
மழை மேகங்களின் வருகையால், 

மரக்கிளைகளில் ஒளிந்துக்கொண்ட 
பறவைகள் வானத்தில் மிதந்து செல்லும் 
வெள்ளை, 
கருப்பு படகுகளை பார்க்கின்றன 
சிறகுகளை விரித்தவாறு, 

கருப்பு மழை மேகங்கள் 
மெல்ல மெல்ல அழ தொடங்குகிறது 
மாலை நேரத்தில், 

குளத்து மீன்களும் 
தண்ணீரில் தாளம் போடுகின்றன 
கருப்பு மழை மேகங்களின் 
அழகை கண்டு, 

தண்ணீரில் நீந்திய  
தவளைகள் கரை மேல் புரண்டு 
தாவி தாவி குதித்து ஓடுகின்றன 
'கர் கர்'என்ற ஒலியை 
எழுப்பி கருப்பு மழை 
மேகத்தை வரவேற்று, 

கருப்பு மேகங்கள் 
கரைந்து ஒழுகுகின்றன 
குளமும் குட்டைகளும்  
ஓடைகளும்  நிரம்பி வழிகிறது  
மழை மேகங்களின் 
கண்ணீர் துளிகளால்......!!!!! 

Vettai Email-vettai007@yahoo.com    

Post a Comment

0 Comments