குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-89 (செந்தமிழ் இலக்கியம்)

குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-89 (செந்தமிழ் இலக்கியம்)


காலடித் தடம் பதி... பாதை உண்டாகும்
பூமியில் இருப்பதும், வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே ! நெஞ்சினில் துணிவிருந்தால், நிலவுக்கும் போய் வரலாம்... என்று அன்றே நம் தமிழ்க்கவிஞன் பாடிய பாட்டு இன்று உயிர் பெற்றுள்ளது எனின் மிகையாகாது.
நம் எண்ணங்கள் தான் நம்மை உருவாக்குகின்றன. முதலில் உங்கள் வாழ்க்கைக்குரிய லட்சியக் கனவுகளை எண்ணுங்கள். நம் வாழ்க்கைப் பாதை செல்லும் திசையை, ஒரு குறிக்கோளை, சரியான இலக்கை நிர்ணயம் செய்யுங்கள். எண்ணங்களைச் சற்றே தூண்டி விடுங்கள். அவை உங்களை வழி நடத்திச் செல்லும். ஆம் உங்கள் கனவுகள் எல்லாம் நனவாவதை நீங்களே உணரலாம்.

சிந்தனை சிலிர்த்து, இன்னல்களைச் சகித்து, கடும் உழைப்பினை நல்கி சமூகம் பயனூறச் செயலாற்றிய சாதனை மற்றவர்களுக்கு இச்சமூகம் நன்றியுடன் என்றும் கடமைப்பட்டுள்ளது. உண்மை தானே!

எத்தனை இன்னல்களைச் சந்தித்தபின் " தாமஸ் ஆல்வா எடிசன் ” மின் விளக்கைக் கண்டுபிடித்து உலக வரலாற்றில் தன் காலடித்தடம் பதித்திருப்பார்? |

முயற்சிகள் இல்லாமலா “கிரகாம்பெல்” தொலைபேசியைக் கண்டுபிடித்திருப்பார்? உழைப்பைத் தராமலா “மார்க்கோனி" வானொலியைக் கண்டுபிடித்திருப்பார்? பறக்கும் சிந்தனை துளிர்விடாமல் இருந்திருந்தால் 'ரைட் சகோதரர்கள், விமானத்தைக் கண்டுபிடித்திருப்பார்களா? 'சாய்லூன்' சீன அறிஞர் காகிதத்தைக் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் இன்று உலகம் காகித்தைப் பயன்படுத்தி இருக்குமா? இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...
அவர்கள் எல்லாம் உலக வரலாற்றில் காலடித்தடம் பதித்தவர்கள் அல்லவா? சாதனை படைக்க எண்ணுபவர்கள் ஜாதகம் பார்ப்பதில்லை. 'வெள்ளத்தனைய மலர்நீட்டம்' என்பார் வள்ளுவர்.

ஒரு முயற்சி நிறுத்தப்படும்போது அது தோல்வியாகிறது. அதுவே, தொடரும் போது வெற்றி ஆகிறது. முடியாதவன் போதிக்கின்றான். முடிந்தவன் சாதிக்கின்றான்.

உள்ள உறுதியுடன் கண்டால், உனக்குக் காட்சி தெரியும் ; காட்சி தெரிந்தால் பாதை விரியும் ; பாதை விரிந்தால் பயணம் தொடரும்; பயணம் தொடர்ந்தால் இலக்கை அடையலாம் ; அதற்கான வெற்றிப் பாதையில் பயணம் செய்து வெற்றியுடன் வளமான வாழ்வைப் பெறலாம். இது ஆய்விற்குரிய சிந்தனைக் கருத்தாகும்.

இன்றைய உலகம் தொழில் நுட்பத்துடன் கணிணிப் புரட்சியும் கலந்த விஞ்ஞான உலகம் இதனை ஆக்க சக்திக்குப் பயன்படுத்தி உலகின் வரலாற்றில் நாமும் காலடித்தடம் பதித்து இடம்பெற வேண்டாமா?

மற்றவர்களுக்கு வழிகாட்ட நீங்கள் பிறந்திருக்கும் போது உங்களுக்கு வழிகாட்ட யாரைத் தேடுகிறீர்கள்? உலகம் உங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறது. திறமை மிக்கவர்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருப்பதில்லை. 

அவர்களே சந்தர்ப்பத்தை உருவாக்குகிறார்கள். இதை மனத்திலே விதையுங்கள் விருட்சமாக வளருங்கள். எதை மனம் கற்பனை செய்கிறதோ! எதை மனம் நம்புகின்றதோ அதை அடைகிறது. அதுவாகவே மாறுகிறது.

நிலவில் தன் காலடித்தடம் பதித்தார் 'ஆம்ஸ்ட்ராங்' இன்றைய மனிதன் அந்நிலவில் குடியேறி வாழத் திட்டமிடுகின்றான். அந்த அளவிற்குத் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. அதன் வழியாக நம் திறமைகளை வளர்த்து, நாமும் முயன்று இந்த உலகில் நம் முகத்திற்கு ஒரு முகவரி ஏற்படுத்துவோம்.

அறிவின் துணை கொண்டு நாமும் முயன்றால் வரலாற்றின் வெற்றிப்பாதையில் நாமும் காலடித்தடம்(தொடரும்) 


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post