52 வயதான கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பு காரணமாக நேற்று தாய்லாந்தில் காலமானார்.

52 வயதான கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பு காரணமாக நேற்று தாய்லாந்தில் காலமானார்.


ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன், சர்வதேச கிரிக்கெட் உலகில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராவார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரான இவர், தனது மாயாஜல சுழற்பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணிக்குப் பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர். இவர் தனது ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார்.
மேலும் 55 ஐ.பி.எல். போட்டிகளிலும் ஷேன் வார்ன் விளையாடி உள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் முதல் வெற்றி கோப்பையை தட்டி சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஷேன் வார்ன் கேப்டனாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பான களவியூகம், வியூகத்தை களத்தில் சரியாக செயல்படுத்துவது, வீரர்களை திறம்பட கையாண்டு அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர்வது என்பன  முக்கியம் என்பதை, T20 கிரிக்கெட் அறிமுகமான ஆரம்ப காலத்திலேயே நிரூபித்து காட்டியவர் ஷேன் வார்ன்.

தனது விடுமுறையைக் கழிப்பதற்காக அண்மையில் தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ள ஷேன் வார்ன், அந்த நாட்டிலுள்ள தனது பண்ணை வீட்டில்  பேச்சு மூச்சற்ற நிலையில்  கிடந்ததாகவும், சிறப்பு மருத்துவக குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும்  கூறப்படுகின்றது. 

அவரது மரணத்துக்குக் காரணம் மாரடைப்பு என்றும் தெரிவிக்கப்படுகின்றது!இவரது திடீரிழந்தமை கிரிக்கெட் உலகை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது!

மிகப்பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டரான ஷேன் வார்னின் இழப்புக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்லாது உலகளவில் பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது கிரிக்கட் அனுபவங்கள்,  திறமை,  பண்புகள் குறித்த பல விடயங்கள்  சமூக ஊடகங்களினூடாகப்  பகிரப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், 2008 ல் ஐ.பி.எல்.லில் ஷேன் வார்னின் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய முகமது கைஃப், இவரது தலைமையின் தனித்துவம் குறித்துப்  பகிர்ந்துள்ளதோடு, புத்திசாலியான இவர்,  T20 கிரிக்கெட்டில் எந்தத் தலைவனும் செய்யாததை செய்துகாட்டியுள்ளதாகப் புகழாரம் சூட்டியுள்ளார். மற்ற எந்தத் தலைவர்ககளும் பின்பற்றாத  உத்தியை ஷேன் வார்ன் கையாண்டமை இவரது வெற்றியின் இரகசியம் எனமுகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

சச்சின்,  ஜெயசூரியா,  தோனி, முரளிதரன், மேத்யூ ஹைடன், ராகுல் டிராவிட்,  ஜாக் காலிஸ்,  கும்ப்ளே,  கில்கிறிஸ்ட்,  அஃப்ரிடி, சைமண்ட்ஸ், கங்குலி, பாண்டிங், அக்தர் போன்ற பெரிய ஜாம்பவான் கிரிக்கெட்டர்களுக்கு மத்தியில், ஷேன் வார்ன் தலைமையில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், பிற்காலத்தில் பெரிய வீரர்களாக உருவெடுத்த, ஆனால் அந்த காலக்கட்டத்தில் இளம் வீரர்களாக இருந்த ஜடேஜா, ஷேன் வாட்சன், யூசுஃப் பதான், முனாஃப் படேல் ஆகிய வீரர்களை வைத்துக்கொண்டு முதல் டைட்டிலை வென்றவர் ஷேன் வார்ன். 

முதல் ஐ.பி.எல். கோப்பையை ராஜஸ்தான் அணி வென்றதற்கு முக்கிய காரணம் இவர்தான் என்றால் மிகையாகாது!

தம்மிடம் இருக்கின்ற  வீரர்களை வைத்துக்கொண்டு, எதிரணிகளுக்கு எதிராக தெளிவான வியூகங்களுடன்  ஒவ்வொரு அணியையும் வீழ்த்தி  இறுதிவரை சென்றது மட்டுமல்லாது, இறுதியில்  தோனி தலைமையிலான சி.எஸ்.கே. அணியை வீழ்த்தி முதல் ஐ.பி.எல். கோப்பையை வென்றவர் ஷேன் வார்ன். இதனால் T20 யில் வெற்றி பெற, பெரிய வீரர்களை அணியில் பெற்றிருப்பது மட்டுமே முக்கியமல்ல என்பதை  நிரூபணமாக்கினார். 

ஷேன் வார்ன் கடந்த 1992ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் முதன் முதலில் அறிமுகமானார்.

அன்று தொடங்கி 16 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சில் மன்னனாகத் திகழ்ந்துள்ளார். 

மொத்தமாக 339 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1,001 விக்கெட்களை சாய்த்துள்ளார். அவரின் சராசரி 25.51 ஆகும். இதில் 38 முறை 5 விக்கெட் ஹவுல் எடுத்துள்ளார். 10 முறை ஒரே போட்டியில் 10 விக்கெட்களையும் சாய்த்த பெருமை பெற்றவர். சர்வதேச அளவில் இதுவரை 2 வீரர்கள் மட்டுமே 1000 விக்கெட்கள் எடுத்துள்ளனர்.

உலகமே வியந்த சாதனை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் ஷேன் 
வார்னே 2வது இடத்தில் உள்ளார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்ன் 708 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முதலில் 700 விக்கெட்களை கடந்தவர் என்ற பெருமை வார்னேவையே சேரும். ஆனால் அவருக்கு பின்னர் முத்தையா முரளிதரன் அந்த மைல்கல்லை எட்டினார்.
அதுமட்டுமல்லாது இன்று வரை 700 விக்கெட்களை தொட்ட ஒரே ஒரு ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்ன் ஆவார்.

ஒரே சீரிஸில் 40 விக்கெட் 5 போட்டிகள் கொண்ட ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றி சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஷேன் வார்ன் 3வது இடத்தில் உள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது ஷேன் வார்ன் 40 விக்கெட்களை கைப்பற்றினார். அப்போது அவருடைய சராசரி 19.92 ஆகும்.

இதுவரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்ன் 708 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்களை கைப்பற்றியவர். ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ள ஷேன் வார்னே 55 போட்டிகளில் ஆடி 57 விக்கெட்களை எடுத்துள்ளவரார்.

ஷேன் வார்ன் மற்றும் மைக்கேல் வாகன் இருவரும் ஆடுகளத்தில் பெரும் எதிரிகள். அவர்கள் எப்படி மோதிக்கொள்கிறார்கள் என்பதை பார்க்க ஏகப்பட்ட  ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால் களத்திற்கு வெளியில் அவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.  ஓய்வுக்கு பிறகும், அடிக்கடி அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியில்  செல்வதுண்டு. ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை விட ஷேன் வார்ன் துடிப்பான மனிதர். ஓய்வறையில், கமெண்ட்ரி பக்ஸில், கோல்ஃப் கிளப்பில், மற்றும் சுற்றுலாக்கலின்போதும்  அனைத்து இடங்களிலும் அவரால்  நான் மகிழ்ச்சியாக இருந்துள்ளேன். ஷேன் வார்ன் ஒரு சாதாரண மனிதர். ஆனால் அவரிடமுள்ள லெக் ஸ்பின் திறமையை  உலகில் எந்தவொரு வீரரிடமும் நான் பார்த்ததில்லை. இப்படிப்பட்ட ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டதை  நினைத்து வாகன் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார்!

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post