குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-88 (செந்தமிழ் இலக்கியம்)

குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-88 (செந்தமிழ் இலக்கியம்)


ஆழ்மனம் தரும் உந்து சக்தி
நாம் எதை ஆழமாக நினைக்கிறோமோ... அது நடக்கும். அதுவே நிஜம். அதற்கு நம் எண்ணம் ஆனது மனத்தில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாக இருத்தல் வேண்டும். கனவு + எண்ணம் + முயற்சி +உழைப்பு + பேரார்வம் அனைத்தும் கலந்த கலவை தான் நம்மை சிகரத்திற்கு உயர்த்திவிடும். அதற்கு வயது ஒரு தடையல்ல. தோல்வி கண்டு துவளாது மறுபடி எழுந்து வீறுடன் போராடுபவர்களுக்கு இயற்கை, எல்லையில்லா ஞானம்" தந்து பக்கபலமாக இருந்து உதவும். இதோ வள்ளுவன் கூற்றைப் படியுங்கள். 

“அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்” (குறள்625) என்கிறார்.

இதன் பொருள், தொடர்ந்து மேலும் மேலும் துன்பம் வந்த போதிலும், நெஞ்சம் கலங்காமல் இருப்பவனிடம் வந்து சேரும் துன்பமே

துன்பப்பட்டு போகும் என்பதாகும். இதுவே சத்தியவாக்கு.

விடா முயற்சி என்பது மனவலிமையா? அல்லது தெய்வீக ஆற்றலா? அல்லது இயற்கை அருளா? பல கேள்விகள் மனத்தில் எழுகின்றன. ஒரு வகையில் மகத்தான சாதனைகளுக்கு அடிப்படையாக விடாமுயற்சியே முழு முதற்காரணமாக அமைவதை உணரலாம். இறை தூதர்கள், தத்துவ மேதைகள், அற்புதங்களைப் புரிவோர். கடந்த கால சமயத்தலைவர்கள்எனஆராய்ந்து பார்த்தால், ஒருஉண்மைபுலப்படும்.அவர்களின் விடாமுயற்சி முன்வைத்த காலை பின் வைக்காத உறுதி, இலக்கில் இம்மி பிசகாத குறி, திட்டவட்டமான குறிக்கோள்ஆகியவை தான் முக்கிய காரணங்கள் ஆகும். விடாமுயற்சி எவ்வளவு பெரிய ஆற்றலைத் தரும் என்பதற்கு ஓர் உண்மை வரலாற்றுச் சம்பவம். முகமது நபியின்வாழ்க்கை வரலாறு... படியுங்கள்...

முகமது நபி, ஒரு இறை தூதர், ஆனால் அவர் எந்த அதிசயத்தையும் நிகழ்த்தவில்லை . அவர் மாய சக்தி படைத்தவரல்ல. அவர் பள்ளிக்கூடம் போனதில்லை . நாற்பது வயதாகும் வரை அவரது லட்சியப் பயணம் ஆரம்பிக்கப்படவில்லை . தன்னை இறைதூதர் என்று அவர் பிறருக்கு அறிவித்த போது, கேலிக்கு ஆளானார். பைத்தியக்காரன் என்று முத்திரைக் குத்தினார்கள். பெண்கள் குப்பையை அவர்மீது வீசினார்கள். மெக்காவிலிருந்து துரத்தியடித்தார்கள். விரட்டினார்கள். பத்து ஆண்டுகள் உபதேசித்தும் கேட்பாரில்லை. வறுமைக்கும், கேலிக்கும் ஆளானார்.

ஆனால், அடுத்த பத்து வருடங்கள் முடிவதற்குள்அவர்தான்எல்லா அரபு நாடுகளிலும் சர்வ வல்லமை படைத்தவர் ஆனார். மெக்கா அவர் சொல்லுக்கு அடிபணிந்து உலகிற்குப் புதிய மார்க்கத்தை வழங்கினார். அவரிடம் வசீகரிக்கும் சொல்லாற்றல், பிரார்த்தனை பலம், இறைவனை நெருங்க வைக்கும் காந்தி சக்தி என்று மூன்று அம்சங்கள்அடங்கி இருந்ததே அவரது சாதனைக்குச்சான்றாகும்.

இறைவன் ஒருவனே ! அவன் உருவமற்றவன். ஒளி வடிவானவன். எல்லா மனிதர்களும் சமம். உலகம் ஒரு ஜனநாயக அமைப்பாக இருக்க வேண்டும். இந்தக் கருத்துக்களை "ஜிப்ரில்" எனும் இறை தூதர் தன்னிடம் வலியுறுத்தியதாகக் கூறுகிறார்.

நபிகள் நாயகம், தான் ஒரு மதத்தை உருவாக்கவில்லை .

“ஒருவனே தேவன்" என்று கருதுபவர்களை ஒரு குலமாக இணைக்கத் தான் வந்திருப்பதாக 1500 ஆண்டுகளுக்கு முன் அறைகூவல் விடுத்தார். 150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளல் இராமலிங்க அடிகள் கூட ஒரு வரலாற்றுச்சான்று.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றுரைக்க எத்துனை இன்னல்களை, மூடநம்பிக்கைகளைச் சந்தித்தும், எதிர்த்தும் தன் கொள்கையில் நிலை பெற்றார். அச்ச உணர்வையும், பொறாமை உணர்வையும், மூடநம்பிக்கை உணர்வையும் விலக்கிவிட்டு மெய்ஞானத்துடன், விடா முயற்சியுடன், கடின உழைப்பு, உண்மையுடன் நேர்மை கலந்து வாழ்பவரிடம் வரும் துன்பம் துன்பப்பட்டு சிதறி ஓடும் என்பது வள்ளுவர் வாய்மொழி மூலம் அறியலாம். உணர்ந்தால் வாழ்க்கை இனிக்கும். நலம்பெற்றுநீடுவாழ்வோம்!(தொடரும்)


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post