நிற்காத ஓட்டம்!

நிற்காத ஓட்டம்!


குழந்தைப் பருவத்தில் நோய்கள் விரட்டின!
ஓடினேன்! ஓடினேன்!

சிறுவன் பருவத்தில் படிப்பு விரட்டியது
ஓடினேன் ஓடினேன்

இளமைப் பருவத்தில் சாதனை விரட்டியது
ஓடினேன் ஓடினேன்

வேலைப் பருவத்தில் வேலை விரட்டியது
ஓடினேன் ஓடினேன்

திருமணப் பருவத்தில் இல்லறம் விரட்டியது
ஓடினேன் ஓடினேன்

மனைவி குழந்தைகளுக்காக நாளும்
ஓடினேன் ஓடினேன்

பணிஓய்வில் காலம் விரட்டியது
ஓடினேன் ஓடினேன்

முதுமைப் பருவத்தில் வாழ்க்கை விளிம்பில்
ஓடுகின்றேன் ஓடுகின்றேன்

சூழ்நிலைகள் பின்னிப் பிணைந்து
விரட்டுகின்றது
ஓடுகின்றேன் ஓடுகின்றேன்

ஓடிக்கொண்டே இருக்கின்றேன்!


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post