எனக்கு 3 வருடமாக அலர்ஜிக் ஒவ்வாமை நோய் இருந்து வருகின்றது. நானும் எத்தனையோ Treatment செய்து விட்டேன். ஆனால் எனக்கு ஒரு பூரணமான தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மிக மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன். இதற்கு பூரணமான ஒரு தீர்வு உண்டா ? தயவு செய்து கூறுங்கள்.
பதில் : அலர்ஜிக் என்பது பல வகையான பொருட்கள் உடம்புக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதன் மூலம் வெளிக் காட்டக்கூடிய பல நோய் அறிகுறிகளைக் கொண்ட ஒரு நிலையாகும்.
அலர்ஜியை ஏற்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. உணவு வகைகள், மருந்துகள், மூலிகைகள், உணவு வகைகளைப் பதனிடுவதற்காகப் பாவிக்கும் சில இரசாயனப் பொருட்கள், செயற்கைப் பொருட்களினால் தயாரிக் கப்பட்ட Cosmetics எனப்படும் வெளிப் பூச்சுப் பொருட்கள், மிருக மற்றும் பறவைகளின் உரோமங்கள் எனக் கூறிக் கொண்டே போகலாம்.
உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் சில மீன் வகைகள், நண்டு, இறைச்சி, முட்டை, நிலக்கடலை, பால் போன்ற பலவகையான உணவுப் பொருட்கள் இருக்கின்றன. ஆனால் ஒருவருக்கு அலர்ஜியை உண்டு பண் ணக்கூடிய உணவு மற்றொருவருக்கு அலர்ஜியை உண்டு பண்ணாது. இது ஒருவருடைய உடம்பில் இருக்கும் Immune System இன் தொழிற்பாட்டைப் பொறுத்தே இருக்கும்.
அண்மைய ஆராய்ச்சியொன்றின்படி தாய்ப்பால் ஊட்டப்படாத பிள்ளைகளுக்கு காலப் போக்கில் அலர்ஜிக் நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம் என இனங்காணப்பட்டுள்ளது மேலும் உணவு வகைகளைக் கவர்ச்சியாக்குவதற்கும் சுவையூட்டுவதற்குப் பாவிக்கக்கூடிய பல இரசாயனப் பொருட்களடங்கிய உணவுவகைகளை உட்கொள்வதன் மூலமும் அலர்ஜிக் ஏற்படலாம்.
அதேபோன்று அலர்ஜிக்கை உண்டு பண்ணக்கூடிய பல மருந்து வகைகள் உள்ளன. எனவே தொடர்ந்து வேறு நோய்களுக்காக மருந்து பாவிப்பவர்களுக்கு அலர்ஜிக் இருப்பின் தனது வைத்தியரை நாடி மருந்தின் மூலம் ஏற் பட்ட அலர்ஜியா? என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
மேலும் சில மூலிகை வகைகளும் அலர்ஜியை ஏற்படுத்துவதோடு சிறுநீரகம், ஈரல் போன்ற உறுப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியன. எனவே நீங்கள் மூலிகை மருந்துகளைப் பாவிப்பதாயின் ஆயுர்வேத, யூனானி வைத்தியர்களின் ஆலோசனைப் படி உட்கொள்வதே சிறந்தது.
அத்துடன் முகம் உட்பட உடம்பைக் கவர்ச்சியாகவும், அழகாகவும் பேணுவதற்காக வேண்டி வைத்தியர்களது ஆலோசனையின்றி செயற்கை அல்லது இரசாயனப் பொருட்களினால் தயாரிக் கப்பட்ட Cosmetics எனப்படும் வெளிப் பூச்சுப் பொருட்களைப் பாவிப்பதனாலும் அலர்ஜிக் உட்பட தோல் புற்றுநோய் போன்றவைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே செயற்கைப் பொருட்களினால் தயாரிக்கப்படுகின்ற பொருட்களைப் பூரணமாகத் தவிர்ப்பதே மேல். மேலும் தூசி, பூச்சிக்கடி, மிருகம் மற்றும் பறவைகளின் உரோமம் போன்றவற்றினாலும் அலர்ஜிக் ஏற்படலாம்.
அலர்ஜிக் நோயின் அறிகுறிகளாக தோல் வீக்கத்துடன் சொறிச்சல், தொடர்ச்சியான தும்மல், மூச்சுக் கஷ்டம், வயிற்றோட்டம் போன்றவைகளின் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குறிகுணங்களோ காணப்படலாம். ஒரு சிலருக்கு அலர்ஜியின் தாக்கம் மூளையைப் பாதித்து Cerebral Allergy என்ற அதிதீவிர நிலையை உண்டு பண்ணும். இது ஒரு சில மருந்துகளினாலும், மூலிகைகளினாலுமே கூடுதலாக ஏற்படுகின்றன. இந்நிலை ஏற்பட்டால் மூளைக்கு நிரந்தரப் பாதிப்பு ஏற்படக்கூ டிய சாத்தியக் கூறுகள் உள்ளன. அதே போன்று மூச்சுக் கஷ்டம் ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை ஏற்படலாம்.
எனவே அலர்ஜிக்கான காரணத்தையம் அறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் தொடர்ச்சியாக ஏற்படக்கூடிய அலர்ஜியைத் தடுக்கலாம்.
நவீன வைத்தியத் துறையில் அலர்ஜியை கட்டுப்படுத்தக் கூடிய பல மருந்து வகைகள் உள்ளன. ஆனாலும் மருந்தினால் மாத்திரம் இந்நோயைக் கட் டுப்படுத்துவது ஒரு முடியாத விடயம். வைத்தியர்கள் கூறும் அறிவுரைகளையும் கடைப்பிடிப்பது முக்கியம்.
யுனானி வைத்தியத்துறையிலும் அலர்ஜிக் நோயைப் பற்றியும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. குருதியில் உடம்புக்கு ஒவ்வாத பொருட்கள் சேர்வதனால் குருதி அதன் இயற்கைத் தன்மைகளை இழந்து பல தாக்கங்களை உடம்பில் ஏற்படுத்துகின்றன எனவும் இதனை அடிப்படையாக வைத்தே அலர்ஜிக்கான சிகிச்சை தங்கியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. நவீன வைத்தியத்துறையை விடவும் யூனானி வைத்தியத் துறையில் பக்க விளைவுகளற்ற சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன. யூனானி சிகிச்சை பெற்று பலர் அலர்ஜியிலிருந்து நிவாரணம் பெற்றுள்ளனர்.
இங்கு கேள்வி கேட்டிருப்பவர். அலர்ஜிக் நோய்க்குப் பூரணத் தீர்வுண்டா? என வினாவியுள்ளார். நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி அலர்ஜிக் நோயைக் குணமாக்குவதென்பது ஒவ்வொரு அலர்ஜி நோயாளியினதும் பிரத் தியேகமான காரணத்தைக் கண்டறிந்து அவற்றுக்கான சிகிச்சையில்தான் தங்கியுள்ளது. அத்துடன் உணவுக் கட்டுப்பாடு என்பதும் மிக மிக முக்கியம்.
உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதில் எமது சமூகத்தில் சில சிக்கல்கள் உள்ளன. முட்டை சாப்பிட வேண்டாம், எனக் கேட்டுக்கொண்டால் முட்டை சாப்பிடமாட்டார்கள். ஆனால் வட்டிலப்பம் சாப்பிடுவார்கள். அதே போன்று உப்பைத் தவிர்க்கும்படி கூறினால் கருவாடு சாப்பிடுகிறார்கள். இதுவே நோய்கள் குணமாகாமல் இருப்பதற்கான காரணமாகும்.
இறுதியாக வாசகர்களுக்கு விஷேடமாக இளம் பெண்களுக்கு ஒரு செய்தியாக செயற்கைப் பொருட்களடங்கிய Cosmetics பொருட்களுக்குப் பதிலாக அல்லாஹ்வினால் இயற்கையாக எமக்குக் கொடுத்திருக்கும் பொருட்களை பாவிக்கும்படி வேண்டுகிறேன்.
Vettai Email-vettai007@yahoo.com



0 Comments