
நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆட்சி மாற்றத்திற்காக அமைதிப் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்காக வழக்குகளில் வாதாட கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது என சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து இதற்கான தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்களையும் சட்டத்தரணிகளையும் அவர்கள் அறிவித்திருந்தனர்.
இதன்படி போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளுக்காக தொடர்ந்தும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்தும் இலவசமாக தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.
இதற்கு மத்தியில் போராட்டக்காரர்களின் வழக்குகளுக்காக சட்டத்தரணிகளால் பணம் அறவிடப்படுகின்றது என்ற ஒரு போலியான செய்தி சில சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
இது சம்பந்தமாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார அவர்களை தொடர்பு கொண்ட போது, தனது குரல் பதிவு ஒன்றின் மூலம் பின்வருமாறு விளக்கம் அளித்தார்.



0 Comments