Ticker

6/recent/ticker-posts

Ad Code



சாதி - மத பேதமின்றி பழகும் நற்குணம் கொண்டவர் சகோதரி நசீமா

கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட சகோதரி மர்ஹூம்  நசீமா முகம்மது அவர்கள் நீண்டகாலமாக குவைத்தில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிக்கொண்டே, ஒரு படப்பிடிப்பாளராகவும் சேவை புரிந்து வருவதாக அறிய முடிந்தது! 

அங்கு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும்  அதிகமான சமூக சேவை நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. அவற்றின் வைபவங்களின்போதும், நிகழ்வுகளின்போதும் அவரால்  எடுக்கப்பட்ட சிறந்த பல நிழற்படங்களை  சமூக ஊடகங்களில் பார்த்து அவரது திறமையில் ஈற்றம் கொண்டு வியந்திருக்கின்றேன்! 

அது மட்டுமல்லாது அவரது நீண்ட தொடர்கதைகள்  பலவற்றை அவ்வப்போது  "வேட்டை" யில் படித்து வந்துள்ளேன். சமூகத்தில் புறையோடிக்கிடக்கும் பல்வேறு விடயங்கள் அவரது  கதைகளின் கதாபாத்திரங்களினூடாக  வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. 
அவரது கதைகளுக்கிருக்கும் மவுசு காரணமாகவும், வாசகர்களின் வேண்டுகோளுக்கமையவும் பல தடவைகள்  அவை மறுபிரசுரம்  செய்து வருவதையும்  அறிகின்றேன். 

எது எவ்வாறிறுந்தபோதிலும் அவர் மரணிக்கும் வரை தன்னால் இயன்றவரை முடியுமான துறைகளிலெல்லாம்  சாதி - மத பேதமின்றி சமூகத்துக்கு நல்லன செய்துள்ளதை அறிய முடிவது மகிழ்ச்சியைத் தருகின்றது! 

அன்னாருக்கு மறுவுலகில் நற்பாக்கியம் கிடைக்க அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன்! 
ஐ.ஏ.ஸத்தார்


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

0 Comments