மௌனம் ஏனோ?

மௌனம் ஏனோ?


யாரோ,ஏதோவென்று
முடிவு செய்த 
கற்பனைக்காகக்
கானல் நீராகப் போகும் 
விடயத்திற்காக
நீ
உருகிச்சாக வேண்டியதில்லை!
அலட்சியமாக இருப்பதே
உனக்கும் நல்லது
உன் பிறன்களுக்கும் நல்லது....
உருக வைக்கும் மூலமே
உறைந்து கிடக்க
உனக்கென்ன நேர்ந்தது?
இமைப்பதற்குள் 
இதயத்தில்
இத்தனை எதிரொலிகளா...
வருடக்கணக்கில் 
மூளை
முந்திரிப்பருப்பாட்டம்
முந்திப்போய்
கனவுகளைக் 
கவிதைகளாய்
விதைத்தால்
நீ
மதி மயங்கிப் போவாயா பாழ்மனமே...
கதியின்றி அலைவாயா
ஊழ்வினையே...
நெஞ்சமே பொறுத்துப்போ...
கொஞ்சமேனும் அடங்கிப்போ...
ஆனாலும்
ஏங்கும் எண்ணங்களை
மின்னும் கனாக்களை
நீ வழக்கமாக்கிக் கொண்டாய்...
நீ விலக்கினாலும் அவை
உனை விட்டு விலகப்போவதில்லை....
இதழ்களும் முகாரி பாடத்தொடங்க...
இதயத்தில் ராகங்கள்
ததும்பித் திளைக்க...
ஏய்! கள்ளி!
சும்மாயிரு...
அந்த நற்சேதி 
உனை நோக்கி
வரும் வரை!
உருகி ஓட நீயொன்றும் மெழுகில்லை!
புன்னகைக்கத் தெரிகிறது...
புளகாங்கிதம் கண்ணில்
ஒளிர்கிறது...
ஒரு மெல்லிய 
காதல் காவியம்
புனையத்தெரிகிறது...
ஒரு மறு மொழி 
சொல்ல மட்டும்
மறந்து போய் விட்டதோ?
ஏனோ..
இந்த மௌனம்?

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post