மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-42 (வரலாறு-பாகம்-2)

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-42 (வரலாறு-பாகம்-2)


ஹாதல ஸியாரம் 42
பன்வில - கபரகல பிரதான பாதையில் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில்  ஹாதல அமைந்துள்ளது. அங்கு முஸ்லிம் குடியிருப்புக்கள் காணப்படாவிடினும் பாதையோரத்தில் அமைந்திருக்கும் சுமார் நூற்றைம்பது வருடங்களையும் கடந்த வரலாற்றைக் கொண்ட பெரியார் அஷ்ஷெய்க்  அப்துல் கபூர் பட்;டாணி வலிய்யுல்லாஹ் அவர்களுடைய ஸியாரம்  ஹாதலையை நாடறியச் செய்துள்ளதெனலாம்.   

மாத்தளையின் புகழ்வாய்ந்த மீஸான் நிறுவனத்தாருக்குச் சொந்தமான “ஹாதல எஸ்டேட்” தேயிலைச் தொழிற்சாலைக்கு எதிராக ஸியாரம் அமைந்திருக்கின்றது.    வெள்ளையரின் ஆட்சியின்போது பாதை நிர்மாணப் பணிகளில் மேற்பார்வையாளராக (ழுஎநசளழைச)ப் பணிபுரிந்த பெரியார்,  ஓர் இறைஞானியாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளார். நீண்ட காலமாக ஸியாரத்தின் பராமரிப்புப் பணிகள் கம்பளிடிபாவா என்ற பெரியார் தலைமையில் இருந்து வந்துள்ளன.  கண்டி மீரான்மகாம் மஸ்ஜிதில் நூற்றாண்டு காலமாக நிகழ்ந்து வந்ததுபோன்று, 1960ம் ஆண்டு வரையும் ஹாதலை ஸியாரத்திலிருந்து ஆரம்பமாகும்  “சந்தல்கூடுப்பவனி” பன்விலைப்பட்டினம் வரையும் பயணித்திருப்பதை மூத்த குடியிருப்பாளர்கள் தற்போதும் நினைவு கூர்வதுண்டு.  

ஸியாரத்துக்குப் பக்கத்தில் அமைந்திருந்த மண்புற்றில் இரு நாகப்பாம்புகள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்ததாக மக்கள் அபூர்வமாகப் பேசிவருகின்றனர். தற்போது அப்புற்று அகற்றப்பட்டு, மீஸான் நிறுவனத்தாரின் முயற்சியில்;  தொழுகை அறையொன்று ஏற்படுத்தப் பட்டிருப்பது சிறப்பானதாகும். . 

அரத்தனை
பாத்ததும்பறைத் தேர்தல் தொகுதியில் பன்விலை பிரதேசசபை நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த அரத்தனக்குடியிருப்பு நூற்றைம்பது வருடங்களiயும் கடந்து செல்லும் வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளுள் ஒன்றாகும். மூவினத்தவர்களும் கலந்து வாழும் அரத்தனக் கிராமம், வத்தேகம - கபரகல - மடுல்கலைச் சந்தியிலிருந்து வலது பக்கமாக மூன்று கிலோ மீற்றர் தொலைவில் பம்பரல்ல பாதையில் அமைந்திருக்கின்றது.

நக்ல்ஸ் மலைத் தொடர்களைத் தழுவியதாக அமைந்திருக்கும் இக்குடியிருப்பு வரகலந்த, அரத்தன, பத்தேகம, போன்ற பல பெருந்தோட்டங்களுக்கு மத்தியில் முற்றிலும்  உள்ளுர்க்குடிகளைக் கொண்டு உருவாகிய ஒரு முஸ்லிம் குடியிருப்புப் பகுதியாகும்.  அவர்களுள் சில இந்திய முஸ்லிம் வம்சாவளியினர் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன. அரத்தனையிலிருந்து  எட்டுக் கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ;கும்புக்கந்துறையிலிருந்தும் குடியேறிய பல வர்த்தகச் செல்வர்களின் வரலாற்றோடு அரத்தனை தொடர்புறுவது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் குடியிருப்பைச் சேர்ந்த பெரியார்  முஹம்மத் இப்றாஹீம் ஸெய்யிது முஹம்மத் (பி.1930) அவர்கள் வழங்கிய தகவல்களிலிருந்து  நூறு வருடங்களுக்கும் முதலில் கும்புக்கந்துறைப் பதியிலிருந்து வர்த்தக நோக்கமாக வர்த்தகர் மீரான் லெப்பை, அவரது புதல்வர் யூனுஸ் லெப்பை  போன்றோர் இப்பகுதியில் குடியேறியதாகக் கூறப்பட்டது.  கனவான் மீரான் லெப்பை அவர்களது வர்த்தக நிறுவனம் அக்காலை அனைவராலும் “மஹகடே” என அழைக்கப்பட்டதாகும்.   குடியிருப்புக்குக் கிட்டிய தூரத்தில் ஹுலுகங்கை, மடுல்கலை, பன்விலை, திகன போன்ற பட்டினங்கள் காணப்படுகின்றன.

குடியிருப்பாளர் பலரின் காணிகள் முன்னர் பத்தேகம எஸ்டேட்டுக்குச் சொந்தமாக விளங்கியதாகும்.  அவர்கள்  அக்காணிகளை விலை கொடுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. தற்போது ஐம்பது குடும்பங்கள் மாத்திரம்  வாழும் அரத்தனையில் முப்பத்திரண்டு முஸ்லிம் வீடுகள் காணப்படுகின்றன. பொருளாதார-சமூக நலங்கருதிப் பலர்  குடிபெயர்ந்து செல்வது கிராமத்தின் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்திருக்கின்றது.

அரத்தனை மஸ்ஜித்
1900ம் ஆண்டின் ஆரம்ப தசாப்தங்களில் குடியிருப்பாளர்கள் ஜும்ஆத் தொழுகைக்காக ஹ{லுகங்கைப் பட்டின  மஷ்ஜிதுக்குச் சென்றதாகக் கூறப்படுவதுண்டு. 1940ம் ஆண்டுகளைத் தொடர்ந்து பிரதேசத்தில் பெரும் வர்த்தகப் புள்ளியாக விளங்கிய  மஹகடே உரிமையாளர்  யூனுஸ் லெப்பை அவர்களது வீட்டோடு  ஒரு பகுதி ஐவேளைத் தொழுகைக்காகவும், ஜும்ஆத் தொழுகைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. 

குறிப்பிட்ட தனியார் கட்டிடம் 1941ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாகக் கட்டிட முகப்பில்  பொறிக்கப்பட்டிருப்பதை  தற்போதும் அவதானிக்க முடிகின்றது.   குடியிருப்பின் ஜனாஸாக்களும் நீண்டகாலமாக கனவான் யூனுஸ் லெப்பை அவர்களுக்குச் சொந்தமான தோட்டத்திலேயே அடக்கஞ் செய்யப்பட்டு வந்திருக்கின்றன.

1964ம் ஆண்டு ஜனாப் முஹம்மது இப்றாஹீம் அவர்களது  அர்ப்பணிப்பில் பத்தேகம எஸ்டே;டடிலிருந்து மஸ்ஜித் அமைக்கப்படுவத்ற்காக அரை ஏக்கர் நிலம் வாங்கி,  வக்பு செய்யப்பட்டமை சிறப்பானதாகும். குறிப்பிட்ட காணியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஓலைக் கொட்டிலில் சன்மார்க்கப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன.  இன்று குடியிருப்புக்குப் பெருமை சேர்க்கும் புதிய மஸ்ஜித் கட்டட நிர்மாணப் பணிகள் 2000ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.  

மஸ்ஜித் வளாகத்தில் அமைந்திருக்கும் குர்ஆன் மத்ரஸாவில் முப்பத்தைந்து  சிறார்கள் கற்று வருகின்றனர். கடந்த பத்து வருட காலமாக உடுதெனியைச் சேர்ந்த மௌலவி எம். எஸ். முஹம்மத் அனீஸ் அவர்கள் ஜமாஅத்தில் ஆற்றி வரும் சமயப் பணிகள் மகத்தானவைகளாகும். தற்போதும் அரத்தனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரியார் ஸெய்யித் முஹம்மத் அவர்களது தாய்மாமனாரான  காயல்பட்டணத்தைச் சேர்ந்த பக்கீர் முஹிதீன் லெப்பை அவர்கள் ஆற்றிய சமயப்பணிகள் குறித்து இன்றும் மக்கள் புகழ்ந்து பேசுவதுண்டு. 
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post