கை நாட்டு...!

கை நாட்டு...!


அன்றொரு நாள்
அமர்ந்திருந்தேன்
அலுவலகத்தில் நான்.

வந்தான் இளைஞன்
ஒருவன்.
வாட்ட சாட்டமானவன் தான்.
"வரலாமா உள்ளே"
அனுமதி கேட்டான்.

வாரும்.
இரும்.
வந்த காரியம்
கூறும்.
கூறினேன் நான்.

நின்றான்.
நெழிந்தான்.
சொறிந்தன்.
அமர்ந்தான்.

சேர் .....
ஓர் விண்ணப்பம்
வேலைக்காக என்றான்.

நிரப்பித் தாருங்கள்.
திக்கினான்.
விக்கினான்.

சிரித்தேன் நான்.

கேட்டேன்
கேள்விகள் சில.
சொன்னான்.
நிரப்பினேன்.

நீட்டினேன்.
"கையொப்பம் இடேன்"
என்றேன் நான்.

நெழிந்தான்.
விழித்தான்.
இட்டேன் மீண்டும் கட்டளை.

'இன்ங் பேட் ' கேட்டான்.
கொடுத்தேன்.
இட்டான்.
பெருவிரல்
அடையாளம்.???

ஒரு முறை
என் புருவம் உயர்த்தினேன்.

வெந்து வெதும்பி
நின்றது நெஞ்சு

ஆச்சர்ய ரேகைகள்
அகத்திலும் என்
முகத்திலும்
அறைந்து கூறியது.

யாரோ
யார் யாரோ ஆசிரியர்கள்
இவனுக்கு 
செய்த துரோகங்கள்.

நீண்ட 
பெருமூச்சு
நெஞ்சுக்குள்
நீண்ட 
உஷ்ணக் காற்றை
வெளியிட்டது.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post