புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 102

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 102

 
அமோசோனாஸ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட  இர்வின்,  தனது  முதுநிலை கற்கைநெறி ஆய்வுக்காக  “அமேசான்வாழ் பழங்குடிகள்” பற்றிய கருப்பொருளைத்  தேர்ந்தெடுத்திருந்தபடியால், வனத்தினுள் ஆங்கங்கே விரவிக்கிடக்கும்  கிராமங்களை  அண்டியப குதிகளுக்கு செரோக்கி - ரெங்க்மா ஆகிய இருவருடனும்   சென்றுவந்துள்ளபோதிலும், தனது வாழ்க்கையில் அமேசான் வனத்தை ஊடறுத்து “ஒரினோகோ” வரை சென்று வருவது  இதுவே முதல் தடவையாகும்!

இதனை இர்வின்  ஒரு புது அனுபவமாகக் காண்கின்றபோதிலும், அவனுக்குள் ஓர்  இனம்புரியாத பயமொன்று கூட  ஊசலாடிக்  கொண்டிருக்கத்தான் செய்தது!

அப்போதுதான் “கொர்ர்ர்....” என்ற கர்சனையோடு சற்றுத் தூரத்தில் ஒரு மிருகம் தரையில் வீழ்வதை அவன் கண்டான்!

சந்திர ஒளி ஊடறுக்க முடியாதவாறு  நெருக்கமாக நீண்டு வளர்ந்திருந்த மரங்கள் காணப்பட்ட வனப்பகுதியினூடாக நடந்து கொண்டிருந்தவர்களுக்கு   ஒளி வழங்க  பாதையின் இரு மருங்கிலும் காய்ந்திருந்த பண்புற்களுக்கு நெருப்பு மூட்டியவராக முன் சென்றுகொண்டிருந்தவரும், மற்றவர்களும் அந்த சத்தத்தம் கேட்டு ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றனர்!

அம்பு பட்ட மிருகமொன்று தூரத்தில்  துடித்துக்கொண்டிருப்பதை  அவர்கள் கண்டபோது  மகிழ்ச்சிப் பெருக்கால் தமது விரல்களை வாயினுள் நுழைத்து அவர்கள் ஒருசேர எழுப்பிய ஓசையினால்  அந்த வனப்பகுதி முழுவதுமே கிளுகிளுத்துப் போனது!

நடந்து சென்றுகொண்டிருந்த அவர்கள் ஓடோடிச்சென்று, உயிர்விட்டுக்கொண்டிருந்த அந்த மிருகத்தைச் சுற்றி நின்றவாறு  மிருகம் உயிர் விடும்வரை காத்து நின்றனர்!

மிருகத்திற்கு அம்பெய்திய ரெங்க்மாவின்  தந்தை மெத்தனமாக நடந்து வந்து, சுற்றி நின்றவர்களை மெல்ல விலக்கிவிட்டு, உயிர் விட்டுக் கொண்டிருக்கும் மிருகத்தின் மாமிசத்தை தம் கூட்டத்தினருக்குள் எவ்வாறு பங்கிடுவது என்று யோசிக்கலானார்!

(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com


Post a Comment

Previous Post Next Post