மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-48 (வரலாறு-பாகம்-2)

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-48 (வரலாறு-பாகம்-2)


வட்டகேபொத்த 48
சுமார் ஒரு நூற்றாண்டுகளுக்கும் முதலிலிருந்து ஆரம்பமாகும் வட்டகேபொத்த முஸ்லிம் குடியிருப்பின் வரலாறு பத்தாம்பள்ளி, வனஹபுவ, மெதகெகில கிராமங்களுடன் இணைந்த சமகால வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.  குறிப்பிடப்பட்ட மூன்று கிராமங்களையும்  இணைத்திருந்த வட்டகேபொத்த ஜமாஅத் அக்காலை பிரதேசத்தின் விசாலமான ஜமாஅத்ததாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. தற்போது வனஹபுவ, மெதகெகில, பத்தாம்பள்ளி  என்பன தனி ஜமாஅத்துக்களாகச்  செயல்பட்டு வருகின்றன.  முதலில் ஒரு சில குடும்பங்களைக் கொண்டு ஆரம்பமாகிய  வட்டகேபொத்த குடியேற்றப்பகுதி இன்று பீளிக்கரை, கெப்பட்டியாவ ஆகிய பகுதிகளையும்  உள்ளடக்கிய பாரிய முஸ்லிம் குடியிருப்புப் பகுதியாக வளர்ச்சி அடைந்திருக்கின்றது. சுமார் இருநூறு குடும்பங்கள் வாழும் வட்டகேபொத்தைக்குப் பெருமை சோப்பதாக எனஸல்கொள்ள மத்திய கல்லூரியும் தெல்தோட்டை மஹ்பழுல் உலமா அறபுக் கலாநிலையமும், இப்றாஹீமிய்யா தொழில்நுட்பக் கல்லூரியும்  அமைந்திருக்கின்றன.

வனஹபுவ:
எழில் நிறைந்த வனஹபுவ முஸ்லிம் குடியிருப்புப் பிரதேசம்  வனஹபுவ குளத்தையும், மலபடாஓயா நீரோடையையும்; அண்டியதாக அமைந்திருக்கின்றது.  சுமார் இருநூறு குடும்பங்கள் வாழும் வனஹபுவையின் வரலாறு நூறு ஆண்டுகளையும் கடந்ததாகக் கொள்ளப்படுவதுண்டு. குடியிருப்புக்குப் பெருமை சேர்க்கும் முஹியித்தீனுல் காதிரிய்யா ஜும்ஆ மஸ்ஜித் 1920ம் ஆண்டில் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. இப்பாரிய பணியின் கர்த்தாவாக விளங்கிய பெருமை தென்னிந்தியா - கோட்டாறுபதியைச் சேர்ந்த அஷ்ஷெய்க் ஸ{லைமானுல் காதிரி  டீபாவாங்களைச் சாரும்.

மீண்டும் 1980ம் ஆண்டுகளில் புனரமைக்கப்பட்ட அம்மஸ்ஜித் இன்று குடியிருப்புக்குப் பெருமை சேர்க்கும் மஸ்ஜிதாகக் காட்சியளிப்பதைக் காணலாம்.  பல துறைகளிலும் வளர்ச்சியடைந்து வரும்  வனஹபுவ குடியிருப்பின் முன்னேற்றத்தில்  பல சமூக சேவா இயக்கங்கள் பெருமளவு பங்களித்து வருவது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post