கோவையில் முப்பெரும் விழா

கோவையில் முப்பெரும் விழா


கனவு மெய்ப்பட படைப்பகம் மற்றும் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு,(கோவை பேரூர் கல்வி மாவட்டம் - மகளிர் அணி)
 இணைந்து நடத்திய *திருக்குறளில் உலக சாதனை பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு  ஓவியக் கண்காட்சி., என
 முப்பெரும் விழா கோவை இடையர்பாளையம் பகுதியில் 24.04.2022 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திருக்குறள் தூதர் , குறள் யோகி முனைவர் மு.க. அன்வர் பாட்சா அவர்கள் தலைமையேற்று, விழாவைத் தொடங்கி வைத்து எழுச்சிமிக்க தலைமை உரையாற்றினார். 
திரு செந்தில்குமார் அவர்கள் வரவேற்புரையாற்ற,கோவை மாவட்ட உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் அமைப்புச் 
செயலாளர் கவியகம் மணிவண்ணன் அவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட விழாவில் கோவை மாவட்டம் கல்விக் குழுத் தலைவர் திருமதி மாலதி , தென் இந்தியா தையல் இயந்திரம் வர்த்தகத்தின்
முதல் பெண்   திருமதி நர்மதா தேவி , லயன்ஸ் கோவை  மாவட்டம் நிருவாகி திரு ஆர்.சி. தியாகராசன் , ஆன்மிகச் செம்மல் முனைவர் க.சோ. ராதாகிருஷ்ணன் , பட்டிமன்றப் பேச்சாளர்  திருமதி மதிவதனி செல்வராஜ் ,  திரு. க. மதிஅழகன் , திரு கவின் சோமசுந்தரம்,,  திரு இராமச்சந்திரன் ஆகியோர்  சிறப்பு  விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக விழாவில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியோர் திருக்குறள் எழுதி உலகச் சாதனை படைத்தனர். 

சாதனையாளர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டனர்.

மேலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி, பன்முகப் படைப்பாளினி, கவிச் சுடர் மதிவதனி செல்வராஜ் அவர்கள் தன் பொன்னான வார்த்தைகளால் "பெண்களின் முன்னேற்றம் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு" என்ற  தலைப்பில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

மூன்றாம் நிகழ்வாக திருமதி கங்கா அவர்களின் ஓவியக் கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட ஓவியங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

விழாக் குழுவினர் மிகச்சிறப்பாக விழா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவிற்குச் சென்னை, திருச்சி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் திரளாக மக்கள் வந்திருந்தனர்.மேலும் துபாய் நாட்டில் இருந்தும்கூட சிலர் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தது மிகவும் நிறைவாக அமைந்தது.

நிறைவாக, விழாவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கனவு மெய்ப்பட படைப்பகத்தின் நிறுவனர், தலைவர் திருமதி பிரபா செந்தில் குமார் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.
வேட்டை நிருபர் 
தமிழ்நாடு 
Vettai Email-vettai007@yahoo.com

1 Comments

  1. சிறப்பு., அனைத்து பதிவுகளும் அருமை., மேன்மேலும் உங்களுடைய அறப்பணி சிறக்க, வளர மனமார்ந்த மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்

    ReplyDelete
Previous Post Next Post