கோதுமை நிற குமரி

கோதுமை நிற குமரி


அந்த அடுக்ககத்திற்கு
வழக்கமாக பால் பாக்கெட் 
விநியோகிக்கிறவன்
அன்று வழக்கம் போலில்லாமல்
சற்று தாமதமாக வருகிறான்

மாடியில் உள்ளவர்கள் 
பால் பாக்கெட்டை
கயிறு கட்டிய கூடையில் 
மேலே இழுப்பது வழக்கம்

அன்றும் வழக்கம் போல் 
அந்த இளைஞன் 
பால்பாக்கெட்களை வைக்க 
மூன்றாவது மாடியில்
கோதுமை நிற குமரிப்
பெண்ணொருத்தி கயிற்றில் 
கூடை இழுக்கிறாள்
அந்த சமயம்
தலை உயர்த்தி
ஒரு ஏக்கத்துடன் பார்த்தது 
அந்த இளைஞன் மட்டுமல்ல

தரை தளத்து
வாசற்படியில்
கட்டிவைத்திருக்கும் - 
அந்த கன்றுகுட்டியும் தான்.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post