
நிதானமாக
ரயிலேறிக்கொண்டிருந்த
வழி தவறிய
ரயில் பூச்சியைப் பிடித்து
வேகமாக ரயிலில்
ஏற்றி விடுகிறார்கள்
ஆடு மேய்க்கும் சிறுவர்கள்.
அதுவரை
இந்த ரயில் பூச்சிக்காகவே
சிக்னல் கிடைக்காது
நின்றிருந்த சரக்குரயில்
இப்போது
பச்சைவிளக்கு விழுந்ததும்
கூவிக்கொண்டே
புறப்படத்தயாரானது.
ரயில் பூச்சியின் முதுகில்
உடன் பயணப்படலாயினர்
ஆடு மேய்க்கும் சிறுவர்கள்.
அவர்கள்
ரயில் பூச்சியை
அதன் தாய்ரயில்பூச்சியிடம்
பத்திரமாய்ச் சேர்த்துவிட்டுத்
திரும்பி வரும்வரை
இங்கிருக்கும் ஆடுகளுக்கு
நல்மேய்ப்பன்
இக்கவிதை மட்டுமே.
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments