Ticker

6/recent/ticker-posts

Ad Code



உலக தலைவர்கள் எங்களுக்கு உதவ வேண்டும். உக்ரேனிய தளபதி


அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் இருக்கும் படைகள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம் என மரியுபோல் நகருக்கான உக்ரேனிய தளபதி தெரிவித்துள்ளார்.

36வது தனி கடல் படையின் தளபதி Serhiy Volyna அமெரிக்காவின் வாஷிங்கடன் போஸ்ட்-க்கு வீடியோ மூலம் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ஒருபோதும் ஆயுதங்களை கீழே போட்டு ரஷ்யாவிடம் சரணடை மாட்டோம். ரஷ்யா படைகளுக்கு எதிரான மோதல் தொடரும்.

இது உலகிற்கு நாங்கள் அனுப்பும் செய்தியாகும். இதுவே எங்களின் கடைசி செய்தியாக இருக்கலாம்.

எங்களுக்கு இன்னும் சில நாட்டுகள் அல்லது சில மணிநேரங்கள் தான் இருக்கும்.

எதிரிபடைகள் எங்களை விட 10 மடங்கு பெரியது. வான், தரை என அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

உலக தலைவர்கள் எங்களுக்கு உதவ வேண்டும். எங்கள் மீது வெளியேற்றும் நடவடிக்கையை பயன்படுத்தி, 3வது நாடு பிராந்தியத்திற்கு அழைத்து செல்லுமாறு கோருகிறோம்.

மரியுபோல் ராணுவ படையில் 500-க்கும் மேற்பட்ட காயமடைந்த வீரர்கள் இருக்கிறார்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இருக்கின்றனர்.

3வது நாடு பிராந்தியத்தில் எங்களுக்கு பாதுாகாப்பு அளிக்க வேண்டும் என நாங்கள் கேட்கிறோம் என தளபதி Serhiy Volyna வலியுறுத்தியுள்ளார்.  

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

0 Comments