Ticker

6/recent/ticker-posts

வாழ்க்கை!


மனிதன் வாழ்க்கை  ஒரு தேன்கூடு
தேனீக்களாய் என்றும் எமது  பாடு..

தேவைகள் சிறக்க சில்லறைத்தேடி,
சில்லறையே  நிம்மதி  என்று   நாடி

தன்நிலை  மறந்து  திசையில்  ஓடி,
சேர்க்க  நினைப்போம் ஆயிரம் கோடி

 நிற்கும்  ஒரு  நாள்   உயிரின் நாடி..
உறவே  புதைக்கும்  மண்ணை மூடி..

அன்று - சேர்ந்து வருமா  ஜோடி? 
எமது வாழ்வில் சேர்த்த கோடி?

 தேனீ -தேனிற்காக திசைகள் பறந்து ,
கூட்டில் சேர்க்கும் ஒன்றாய் இணைந்து.

எல்லாம் இணைந்து சேர்த்த தேனே ,
தனக்கு இல்லாமல் போகும் தானே…

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

0 Comments