
உனக்காய் ஒரு மடல் வரைகிறேன்
எண்ணக் கிடக்கைகளை எழுத்திலே தருகிறேன்
என் நினைவு உன்னோடு கண்ணே
என்றுமே வாழ்விலே நீதான் மானே
மறப்பேனோ மதியே வாடாத மலரே
மங்கிய ஒளியிலும் மின்னிடும் பொன்வண்டே
கடலோடு உரசும் அந்திச் சூரியனே
கவிதையாய்ப் பொழிந்தாயே கருத்தினில் நிறைந்தாயே
சிரிப்பினில் நெருப்பை மூட்டும் பேரழகே
சிருங்கார சுரங்கள் மீட்டிடும் யாழே
உள்ளங்கள் சேர்ந்து ஒன்றானது இன்றே
உதிரத்தில் கலந்து ஓடுகிறாய் நன்றே
Dr ஜலீலா முஸம்மில்
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments